தேங்காய் எண்ணெயில் இந்த 2 பொருள் சேர்த்து அப்ளை பண்ணுங்க… கோல்டன் ஃபேஸ்பேக் இதுதான்!
எளிமையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே கோல்டன் ஃபேஷியல் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம். வாரத்திற்கு ஒருமுறை இதை செய்தால், உங்கள் முகம் நிச்சயம் ஜொலிக்கும்!
எளிமையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே கோல்டன் ஃபேஷியல் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம். வாரத்திற்கு ஒருமுறை இதை செய்தால், உங்கள் முகம் நிச்சயம் ஜொலிக்கும்!
தேங்காய் எண்ணெயில் இந்த 2 பொருள் சேர்த்து அப்ளை பண்ணுங்க… கோல்டன் ஃபேஸ்பேக் இதுதான்!
சரும அழகை மேம்படுத்த ஃபேஷியல் செய்வது என்பது காலம் காலமாகப் பின்பற்றப்படும் முறையாகும். ஆனால், பார்லருக்குச் சென்று பெரிய தொகையைச் செலவழிக்காமல், வீட்டிலேயே இயற்கையான முறையில் "கோல்டன் ஃபேஷியல்" செய்து பளபளப்பான சருமத்தைப் பெற முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், இந்தப் பதிவில், எளிமையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே கோல்டன் ஃபேஷியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். வாரத்திற்கு ஒருமுறை இதைச் செய்தால், உங்கள் முகம் நிச்சயம் பொலிவுடன் ஜொலிக்கும்!
Advertisment
தேவையான பொருட்கள்: பசும்பால், சர்க்கரை, தேன், எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய், மஞ்சள் தூள், தயிர், சுத்தமான காட்டன் பஞ்சு.
முதலில் உங்கள் முகத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு, சுத்தமான காட்டன் பஞ்சில் சிறிதளவு பசும்பால் எடுத்து, மெதுவாக முகம் முழுவதும் துடைக்கவும். பால் சிறந்த இயற்கை க்ளென்சராகச் செயல்பட்டு, சருமத்தில் உள்ள அழுக்குகள், எண்ணெய் பிசுக்குகள், மேக்கப் தடயங்களை நீக்கும். இது சருமத்திற்கு ஈரப்பதத்தையும் அளிக்கும்.
அடுத்து, சருமத்தில் உள்ள டெத் செல்களை நீக்க ஸ்க்ரப் செய்ய வேண்டும். சிறிய கிண்ணத்தில், ஒரு கரண்டி சர்க்கரை, அரை கரண்டி தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்துக் நன்கு கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி, விரல்களால் மெதுவாக வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். சர்க்கரை சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டராகச் செயல்பட்டு, இறந்த செல்களை நீக்கி, சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் மாற்றும். தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தையும், எலுமிச்சை சாறு நிறத்தையும் மேம்படுத்தும். 2-3 நிமிடங்கள் தேய்த்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.
Advertisment
Advertisements
முகத்திற்கு நீராவி பிடிப்பது மிகவும் முக்கியம். இது சருமத் துளைகளைத் திறந்து, உள்ளே இருக்கும் அழுக்குகள், கருப்புப் புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகள் வெளியேற உதவும். ஒரு பாத்திரத்தில் சூடான நீர் எடுத்து, துண்டை தலையில் போர்த்திக்கொண்டு, முகத்தை நீராவிக்குக் காட்டவும். சுமார் 5 நிமிடங்கள் நீராவி பிடிக்கலாம். இதனால் சருமம் புத்துணர்ச்சி பெறுவதோடு, அடுத்து அப்ளை செய்யும் ஃபேஸ் பேக்கின் சத்துக்களை நன்றாக உறிஞ்சவும் உதவும்.
இறுதியாக ஒரு கிண்ணத்தில், ஒரு கரண்டி தேங்காய் எண்ணெய், அரை கரண்டி மஞ்சள் தூள், அரை கரண்டி தயிர் சேர்த்துக் கெட்டியான பேஸ்ட் போல நன்கு கலக்கவும். இந்த பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் சீராகத் தடவவும். இந்த ஃபேஸ் பேக்கை சுமார் 15 நிமிடங்கள் முகத்தில் காய விடவும். காய்ந்ததும், குளிர்ந்த நீரால் மெதுவாகக் கழுவவும். இந்த கோல்டன் ஃபேஷியலை வாரத்திற்கு ஒருமுறை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். ஃபேஷியல் செய்வதற்கு முன், உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை உள்ளதா எனச் சரிபார்க்க, சிறிதளவு பேக்கை கையின் ஒரு சிறிய பகுதியில் தடவிப் பாருங்கள். நல்ல தரமான, கலப்படம் இல்லாத பொருட்களைப் பயன்படுத்துங்கள். ஃபேஷியல் செய்த பிறகு, சருமத்தை மிருதுவான துண்டால் ஒற்றி எடுக்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.