நம் பாட்டிகள், அம்மாக்களுக்கு எப்படி அவ்வளவு அடர்த்தியான, நீளமான கூந்தல் இருந்தது? இதுதான் அந்த சீக்ரெட்!

பண்டைய வேதம், அழகு என்பது நல்ல ஆரோக்கியத்தின் விரிவாக்கம் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆரோக்கியமான முடி மற்றும் தோல் ஒரு சீரான உடலின் பிரதிபலிப்பைத் தவிர வேறில்லை.

நம் உடலை உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் கவனித்துக்கொள்வதற்கான நிலையான நடைமுறைகளை நாம் எப்போதும் பின்பற்றுகிறோம். இங்கு உங்கள் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில ஆரோக்கியமான நடைமுறைகளைப் பிரபல அழகுகலை நிபுணர் பகிர்ந்துள்ளார்.  அவை இதோ!

உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும்

நாம் அனைவரும் நம் தாய்மார்கள் மற்றும் பாட்டிகளிடம் இருந்து  நல்ல மசாஜ் பெற்று வளர்ந்தவர்கள். ஒரு மென்மையான மசாஜ் மூலம் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது உச்சந்தலையில் ஈரப்பதத்தை மட்டுமல்ல, இது உங்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் வளரும். ஒவ்வொரு முறை தலைக்கு குளிப்பதற்குமுன், நல்ல எண்ணெய் மசாஜ் செய்து குறைந்தது 10 நிமிடங்களாவது வைக்கவும்.

தினமும் காலையில் பட்டையுடன், எலுமிச்சை கலந்த தண்ணீரை குடிக்கவும்

இலவங்கப்பட்டை உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளை வழங்கும் ஒரு மூலப்பொருள். நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை குடல் எவ்வளவு முக்கியமானது என்பதை நவீன ஆராய்ச்சி நிரூபிக்கிறது, அதை ‘இரண்டாவது மூளை’ என்று குறிப்பிடுகிறது.

காலையில் இலவங்கப்பட்டை மற்றும் எலுமிச்சை சேர்த்து வெந்நீரைக் குடிப்பதால், குடலில் ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள பாக்டீரியாக்கள் உருவாக உதவுகிறது, இதனால் பளபளப்பான தோல் மற்றும் பொலிவான கூந்தல் உங்களுக்கு கிடைக்கும்.  குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு இதை தொடர்ந்து செய்யுங்கள், நீங்கள் மறுக்க முடியாத முடிவுகளைக் காண்பீர்கள்.

வாரத்திற்கு ஒரு முறை உங்கள் உச்சந்தலையை கழுவவும்

நாம் அனைவரும் தலைமுடியைக் கழுவுகிறோம், ஆனால் நம் உச்சந்தலையை அலட்சியம் செய்கிறோம். உங்கள் உச்சந்தலையை சுத்தம் செய்யாததுதான் உங்களுக்கு அரிப்பு, தொற்று அல்லது பொடுகு ஏற்படுவதற்கான முக்கிய காரணம். வாரத்திற்கு ஒருமுறை உங்கள் உச்சந்தலையை சுத்தம் செய்யத் தொடங்கும் போது, ​​கணிசமான அழுக்கு குறைந்து, உங்கள் தலை குளிர்ச்சியாக இருக்கும்.  அழுக்கு மற்றும் மாசு இல்லாத உச்சந்தலை சிறந்த தரமான முடிக்கு வழி செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நம் முடி-வேர்களை நாம் எவ்வளவு நன்றாக பராமரிக்கிறோம் என்பதில் இருந்து தொடங்குகிறது.

முடி ஆரோக்கியத்திற்கு யோகா ஆசனங்களைப் பயிற்சி செய்யுங்கள்

யோகா ஆசனங்கள் அவற்றின் அணுகுமுறையில் மிகவும் அறிவியல் பூர்வமானவை. அவை நமது உடலில் உள்ள சில அமைப்புகளைத் தூண்டி, விரும்பிய பகுதிகளில் ஹார்மோன் அளவை அதிகரிக்க அல்லது குறைக்கின்றன. உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இது மிகவும் எஃபெக்ட் ஆக இருக்கிறது.

சில யோகா ஆசனங்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் (இது முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாகும்) மற்றும் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதோ அந்த ஆசனங்கள்;

பலாசனம் (குழந்தையின் போஸ்)- மன அழுத்தத்தை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.

வஜ்ராசனம் (தண்டர்போல்ட் போஸ்) – ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவைத் தூண்டுவதில் உதவியாக இருக்கும்.

மத்ஸ்யாசனம் (மீன் போஸ்)- வலுவான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுவதற்காக பிரபலமாக அறியப்படுகிறது.

அதோ முக ஸ்வனாசனா (கீழ்நோக்கிய போஸ்)- புதிய இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை உச்சந்தலைக்கு அனுப்புகிறது.

இந்த ஆசனங்களை வாரத்திற்கு 4 முறையாவது பயிற்சி செய்யுங்கள்.

உங்கள் உணவு மற்றும் அழகுசாதன தயாரிப்புகளில், முடிக்கு தேவையான நல்ல இயற்கை பொருட்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.

நம் முடி மற்றும் தோலுக்கு எவ்வளவு கடுமையான பொருட்கள் பயன்படுத்துகிறோமோ, அவ்வளவு இயற்கை அடுக்குகள் மற்றும் நல்ல நுண்ணுயிரிகளை அதிலிருந்து அகற்றுகிறோம். இயற்கையான பொருட்கள் மென்மையானவை மற்றும் சரியான முறையில் பயன்படுத்தும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நம் முன்னோர்கள் தங்கள் தலைமுடியை எவ்வளவு சிறப்பாக பராமரிக்க முடிந்தது என்பதில் இது பிரதிபலிக்கிறது. உண்மையில், நம் தாத்தா, பாட்டி மற்றும் பெற்றோர்கள் வளர்ந்தபோது, அவர்களின் அடர்த்தியான மற்றும் நீளமுள்ள முடியைப் பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். மேலே குறிப்பிட்டுள்ள மற்றும் தூய பொருட்களைப் பயன்படுத்தும் தினசரி நடைமுறைகளின் பலன் இது. ஆர்கனிக் உணவு, நமது உடலின் செயல்பாட்டை மாற்றுகிறது, அதே நேரத்தில் நம்மை இலகுவாகவும் அதிக ஆற்றலுடனும் உணர வைக்கிறது.

முடி ஆரோக்கியத்திற்கு சிறந்த சில பொருட்கள்: ஆளிவிதை, கிட்னி பீன்ஸ், இலவங்கப்பட்டை, வெந்தயம், நெய் மற்றும் சியா விதைகள்.

நீங்கள் அன்றாடம் செய்யும் சிறு சிறு பழக்கங்களே உங்களை ஒரு வலிமையானவராக மாற்றும். இந்தியாவின் பண்டைய ஞானம் ஒரு முக்கிய சித்தாந்தத்தை மனதில் கொண்டு செயல்படுகிறது: அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஆரோக்கியமாக இருப்பது என்பது உடல், மனம் மற்றும் ஆத்மா ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக (முழுமையான ஆரோக்கியம்) ஆரோக்கியமாக இருப்பதைக் குறிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Natural hair care routine for hair for smooth hair

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express