Advertisment

Homemade Hair Pack for Growth: செம்பருத்திப் பூ, கற்றாழை ஜெல் இருந்தா போதும்; முடி வளர்ச்சியை அதிகரிக்க ஹேம்மேட் ஹேர்பேக்!

முடியை அடர்த்தியாக வளரச் செய்வதற்கு செம்பருத்தி பூ, கற்றாழை ஜெல் சேர்த்து ஹேர்பேக் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். இதை வீட்டிலேயே செய்து கொள்வதால் பெரிதாக செலவும் ஆகாது.

author-image
WebDesk
New Update
Hairpack

Hair Care Tips in tamil

Home Remedies for Healthy Hair: முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு எத்தனையோ வழிமுறைகளை இணையத்தில் ஆராய்ந்திருப்போம். மேலும், ஷம்பூ, ஹேர் ஆயில், சீரம் போன்ற பொருள்களையும் ஏராளமாக செலவு செய்து வாங்கி இருப்போம். ஆனால், இவற்றில் இரசாயனங்கள் கலந்திருப்பதால் சில நேரங்களில் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் விதமாக வீட்டிலேயே ஹேர் பேக் தயாரித்துக் கொள்ளலாம்.

Advertisment

3 செம்பருத்தி பூக்கள், 5 செம்பருத்தி இலைகள், கற்றாழை ஜெல் 1 ஸ்பூன், 10 கறிவேப்பிலை இலைகள் ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு பசை பதத்திற்கு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை அரைத்து எடுத்ததும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை இதனுடன் சேர்த்து கலக்க வேண்டும்.

இந்த ஹேர்பேக்கை தலையில் தேய்த்து விட்டு, சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முடி வளர்ச்சி அதிகரிப்பதுடன் பொடுகு தொல்லை மற்றும் இளநரை பிரச்சனைகளும் நீங்கும்.

 

Advertisment
Advertisement

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Aloevera and its skincare benefits Hibiscus and its health benefits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment