கெமிக்கல் ஹேர் டைக்கு குட்பை சொல்லுங்க… இயற்கையாக வீட்டிலே இப்படி ரெடி பண்ணுங்க; டாக்டர் தீபா அருளாளன்
கெமிக்கல் இல்லாம முடிக்கு டை அடிக்க முடியாதான்னு கேட்டா, தாராளமா அடிக்கலாம். நம்ம பாரம்பரியத்துல, இயற்கையான ஹேர் டை-கள் நிறைய இருக்கு. அதுல சில முக்கியமான விஷயங்களை பத்தி இந்த வீடியோவில் பேசுகிறார் டாக்டர் தீபா அருளாளன்
கெமிக்கல் இல்லாம முடிக்கு டை அடிக்க முடியாதான்னு கேட்டா, தாராளமா அடிக்கலாம். நம்ம பாரம்பரியத்துல, இயற்கையான ஹேர் டை-கள் நிறைய இருக்கு. அதுல சில முக்கியமான விஷயங்களை பத்தி இந்த வீடியோவில் பேசுகிறார் டாக்டர் தீபா அருளாளன்
இப்போது சந்தையில் கிடைக்கும் பல ஹேர் டைக்களில் அமோனியா இல்லை என்று கூறப்பட்டாலும், அவற்றில் பாரபனிலமின் டயமின் (PPD) போன்ற பல்வேறு ரசாயனங்கள் கலந்திருக்கவே செய்கின்றன. இந்த ரசாயனங்கள் முடிக்கு மட்டுமல்ல, உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடியவை. இது போன்ற ரசாயனங்களால் முடி வறண்டு போதல், நுனி வெடிப்பு, முடி உதிர்தல், கண் மற்றும் தோல் சார்ந்த பிரச்சனைகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு மாற்றாக, ரசாயனங்கள் இல்லாத இயற்கை ஹேர் டைக்களைப் பற்றி இந்த வீடியோவில் பேசுகிறார் டாக்டர் தீபா அருளாளன்.
Advertisment
கருப்பு நிறத்திற்கான இயற்கை ஹேர் டை
அவுரி மற்றும் மருதாணியை சரியான முறையில் பயன்படுத்தினால் கருமையான நிறத்தைப் பெறலாம். இதற்கு இரண்டு கட்ட செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். இந்த இரண்டு பொடிகளும் நாட்டு மருந்து கடைகளிலும், ஆன்லைனிலும் கிடைக்கின்றன.
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்:
மருதாணி பொடி - 50 கிராம் அவுரி பொடி - 50 கிராம் சிறிதளவு உப்பு பூண்டு - 4 பல்
செய்முறை:
முதலில் தலைக்குக் குளித்து சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.
இரவு நேரத்தில், ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி மருதாணி பொடியுடன், ரசத்திற்கு இடிப்பது போல இடித்த 4 பல் பூண்டையும், போதுமான அளவு தண்ணீரையும் சேர்த்து சந்தனம் போல கெட்டியாகக் கலக்கவும்.
இதை மூடி வைத்து இரவு முழுவதும் ஊற விடுங்கள். மறுநாள் காலையில், இந்தக் கலவை ஆரஞ்சு நிறமாக மாறியிருக்கும். அதைத் தலையில் நன்கு பூசிக் கொள்ளுங்கள்.
ஒரு அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை ஊற வைத்து, மைல்டான ஷாம்பூவை பயன்படுத்தியோ அல்லது வெறும் தண்ணீரிலோ முடியை அலசுங்கள். பூண்டு சேர்ப்பதால் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
தலை நன்றாக காய்ந்த பிறகு, இரண்டாவது கட்ட செயல்முறையைத் தொடங்குங்கள்.
மூன்று தேக்கரண்டி அவுரி பொடியுடன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் கலந்து உடனே தலையில் பூசவும். அவுரி பொடியை ஊற வைக்கக் கூடாது.
கலந்து இரண்டு நிமிடங்களுக்குள் வயலெட் நிறம் வெளிப்படும். அதைத் தலையில் நன்கு தடவி, முக்கால் மணி நேரம் கழித்து ஷாம்பு இல்லாமல் தண்ணீரில் மட்டும் முடியை அலசுங்கள்.
இந்த முறையைத் தொடர்ந்து செய்து வந்தால் முடி கருமையாக மாறும்.