இளநரைக்கு தீர்வாகும் மூசாம்பரம்; எப்படி யூஸ் பண்ணுவது? டாக்டர் ஜெயரூபா விளக்கம்
இளநரையை தடுக்கக் கூடிய ஆற்றல் மூசாம்பரத்திற்கு இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனை பயன்படுத்தும் முறை குறித்து மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார்.
இளநரையை தடுக்கக் கூடிய ஆற்றல் மூசாம்பரத்திற்கு இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனை பயன்படுத்தும் முறை குறித்து மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார்.
இளம் பருவத்திலேயே நரை முடிகள் தோன்றும் போது, அவை தன்னம்பிக்கையை குறைக்கும் வகையில் அமைவதாக பலரும் கூறுகின்றனர். இதனை பித்த நரை என்றும் கூறுவார்கள் என்று மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். உடலில் பித்தம் அதிகரிப்பதால் கூட இளநரை வரலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
இது தவிர வைட்டமின் பி12 குறைபாடு, மரபியல் காரணமாகவும் இளநரை வரக்கூடும். முடியில் இருக்கும் மெலனின் என்ற வேதிப்பொருள் தான் கருப்பு நிறத்தை கொடுக்கிறது. இதன் செயல்திறன் குறையும் போது இளநரை உருவாகிறது.
இந்த இளநரையை மறைக்க செயற்கையான ஹேர் டை பயன்படுத்தினால் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். இதனை தடுக்க இயற்கை மூலிகையான மூசாம்பரத்தை பயன்படுத்தலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
கற்றாழையில் இருந்து வெளியாகும் மஞ்சள் நிற பாலை பதப்படுத்தி தயாரிப்பது தான் மூசாம்பரம் என்று மருத்துவர் ஜெயரூபா விளக்கம் அளித்துள்ளார். இதனை தேங்காய் பால், நெல்லிக்காய்ச் சாறு அல்லது டீ டிகாஷனில் சேர்த்து ஊறவைத்து அதனை ஹேர் டையாக பயன்படுத்தலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
Advertisment
Advertisements
அதற்கான செய்முறையை தற்போது பார்க்கலாம். மூசாம்பரத்தை நெல்லிக்காய் சாறு, டீ டிகாஷனுடன் சேர்த்து மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இத்துடன் மருதோன்றி பொடியையும் சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளலாம். இவ்வாறு செய்த பின்னர், இந்தக் கலவையை தலையில் தேய்த்து விட்டு சுமார் 1 மணி நேரம் கழித்து குளித்து விடலாம்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் இளநரை பாதிப்பு குறையும். இது இயற்கையான ஹேர் டையாக பயன்படுகிறது என்று மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். இதனால் பக்கவிளைவுகள் ஏற்படாது என்று அவர் வலியுறுத்துகிறார்.
நன்றி - SHREEVARMA Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.