முடி உதிர்வு பிரச்சனைகள் பலருக்கு இருப்பது போல், நரை முடிகளும் பலருக்கு இருக்குறது. இதனை போக்குவதற்கு செயற்கையான ஹேர் டைகளை பயன்படுத்துவார்கள். ஆனால், இயற்கை வழியில் இரசாயனம் கலக்காத ஹேர் டை பேக் செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம்.
ஓமவல்லி இலைகள் பெரும்பாலும் சளிக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய மருத்துவ குணம் வாய்ந்த இதனை கொண்டு எளிமையாக ஹேர் டை பேக் செய்யலாம். முதலில் 10-15 ஓமவல்லி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை இடி கல்லில் போட்டு நன்றாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஒரு சொட்டு கூட தண்ணீர் சேர்க்க கூடாது.
இலைகள் அனைத்தையும் நன்றாக இடித்த பின்னர், அதனை பிழிந்து வடிகட்டியில் சாறு எடுக்க வேண்டும். சுமார் இரண்டு ஸ்பூன் அளவிற்கு இதில் இருந்து சாறு கிடைக்கும். இத்துடன் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் அவுரி பொடி, இரண்டு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இது பசை பக்குவத்திற்கு வந்ததும், தலையில் நரைமுடிகள் இருக்கும் இடங்களில் தேய்க்க வேண்டும்.
அவ்வாறு தேய்த்து முடித்ததும் ஒரு மணி நேரம் கழித்து சீவக்காய் போட்டு குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம். இதன் மூலம் நரைமுடிகள் நீங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“