முடி சாயத்தின் பயன்பாடு இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் முறையாக மாறிவிட்டது. முதியவர்கள் தங்களது நரை முடிகளை மறைப்பதற்காக சாயம் பயன்படுத்தினால், இளம் தலைமுறையினர் 'பேஷன்' பின்பற்றும் வகையில் வண்ண வண்ண சாயங்களை வைத்து அழகுபடுத்தி கொள்கின்றனர்.
இதனால் தலைமுடியின் ஆரோக்கியம் பெரிதும் பாதிப்படையும் என்பதை மறந்து விடுகின்றனர். ஆகையால் இயற்கையாக செய்யக்கூடிய சாயத்தை வைத்து நரைமுடியையும், முடி உதிர்வையும் தடுக்கமுடியும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இயற்கை சாயத்தை எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
- 2 டீஸ்பூன் - கலோஞ்சி விதைகள்
- 1 க்ளாஸ் - தண்ணீர்
- 1 டீஸ்பூன் - நெல்லிக்காய் தூள்
- 1 டீஸ்பூன் - வேப்பம்பூ தூள்
- 1 டீஸ்பூன் - காபி தூள்
- 1 டீஸ்பூன் - மெஹந்தி தூள்
வழிமுறை:
- 2 டேபிள் ஸ்பூன் கலோஞ்சி விதைகளை வறுக்கவும்
- வறுத்த விதைகளை, காயவைத்து விட்டு அரைக்கவும்
- அரைத்த விதைகளை, ஒரு பாத்திரத்தில் வைத்து, அதனுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும்
- 1 தேக்கரண்டி நெல்லிக்காய் தூள் சேர்க்கவும்
- 1 டேபிள் ஸ்பூன் வேப்பம்பூ பொடி சேர்க்கவும்
- 1 தேக்கரண்டி மெஹந்தி தூள் சேர்க்கவும்
- 1 தேக்கரண்டி காபி தூள் சேர்க்கவும்
- அனைத்தையும் கலந்து, சற்று ஆறவிடவும்.
எப்படி உபயோகிப்பது?
நரை முடி மற்றும் முடியின் வேர்களில் தடவவும்
எத்தனை முறை?
வாரம் ஒருமுறை இதைப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
இதனால் கிடைக்கும் நன்மைகள்:
- நரை முடியை மறைக்கும்
- முடியின் வேர்களை வலுவாக்கும்
- முடி உதிர்வை குறைக்கிறது
- முடியை மென்மையாகவும் மிருதுவாகவும் ஆக்குகிறது
- புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
இது உண்மையிலேயே வேலை செய்கிறதா?
இயற்கையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஹேர் டை, முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது.
தோல் மருத்துவரும் ட்ரைகாலஜிஸ்ட் டாக்டர் வந்தனா பஞ்சாபி இந்தியன் எஸ்பிரஸிடம் கூறியதாவது, " இது பயன்படுத்துவதால் ஒவ்வாமை அல்லது எரிச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு. இது பிபிடி என்னும் ரசாயனம் கொண்டிருந்தால், பாதிப்பு ஏற்படலாம்.
கருப்பு மெஹந்தியாக இருக்கக்கூடாது, மாறாக இயற்கையான மெஹந்தியாக இருக்க வேண்டும், ஏனெனில் கருப்பு மெஹந்தியிலும் பிபிடி உள்ளது" என்று கூறினார்.
மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு உட்பட பல்வேறு காரணிகளால் முடி உதிர்தல் ஏற்படலாம் என்று கூறினார். "முடி நிறம் அல்லது முடி மீண்டும் வளர உதவுகிறது அல்லது முடி உதிர்வதைத் தடுக்கிறது என்பதை நிரூபிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை", என்றார்.
காபி தூள், நெல்லிக்காய், மெஹந்தி, வேப்பப்பொடி மற்றும் கலாஞ்சி ஆகியவற்றைக் கொண்ட இயற்கையான முடி சாயம், ஒருவரின் சாம்பல் நிறத்தை மறைக்க உதவும் என்று புது தில்லியின் தலைமை தோல் மருத்துவர் மற்றும் இயக்குனர் டாக்டர் மோனிகா சாஹர் ஒப்புக்கொண்டார். முடி உதிர்வதைத் தடுக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.
நிபுணர் மேலும் கூறுகளை விவரித்தார்:
- காபி தூளில் (caffeine) உள்ளது, இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. இருப்பினும், காபி பவுடரை தலைமுடியில் பயன்படுத்துவதால் குறிப்பிடத்தக்க நன்மைகள் உள்ளதா என்பது தெளிவாக இல்லை.
- மருதாணி என்றும் அழைக்கப்படும் மெஹந்தி, இயற்கையான முடி சாயமாக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சாம்பல் நிறத்தை மறைக்க உதவுகிறது மற்றும் முடிக்கு சிவப்பு-பழுப்பு நிறத்தை வழங்குகிறது. சில ஆய்வுகளில், மெஹெந்தியில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இருக்கலாம் என்று கூறுகின்றன. அவை உச்சந்தலையில் தொற்றுநோய்களைத் தடுக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும், இது முடி உதிர்தலுக்கு பங்களிக்கும்.
- வேம்பு தூள் அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளுக்கு அறியப்படுகிறது.
- கலாஞ்சி முடி உதிர்வைத் தடுக்கும் என்பதற்கு நேரடி ஆதாரம் இல்லை என்றாலும், உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பது ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும்.
"இயற்கையான முடி சாயம் சாம்பல் நிறத்தை மறைக்க உதவும், ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை பராமரிப்பது முக்கியம், மேலும் நீங்கள் குறிப்பிடத்தக்க முடி உதிர்வை சந்தித்தால் ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிக்கவும்" என்று டாக்டர் சாஹர் இந்தியன் எஸ்பிரஸிடம் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.