முட்டையுடன், எலுமிச்சை சாறு; உங்க முடி அடர்த்தியா வளர சூப்பரான ஹேர்பேக்!
முட்டை, எலுமிச்சை சாறு மற்றும் தயிர் ஆகியவை சேர்த்து ஈசியான ஹேர்பேக் எப்படி செய்வது என இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இவை முடியை அடர்த்தியாக வளரச் செய்யும்.
முடியை அடர்த்தியாக வளரச் செய்ய வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், முடி உதிர்வு பிரச்சனை இருப்பதால், அடர்த்தியான முடி நிறைய பேருக்கு இருக்காது. எனவே, முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதற்கு எத்தனையோ ஷாம்பூக்கள், ஹேர் சீரம், போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
Advertisment
எனினும், இந்தப் பொருட்கள் மூலம் எதிர்பார்த்த முடி வளர்ச்சி கிடைப்பதில்லை எனவும் சிலர் கூறுகின்றனர். குறிப்பாக, சில பொருட்களில் அதிகப்படியான இரசாயானங்கள் கலந்திருக்கும். இவை நம் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியவை. இதன் காரணத்தினால் வீட்டில் தயாரிக்கக் கூடிய ஹேர்பேக்கை சிலர் பயன்படுத்த விரும்புவார்கள்.
இது போல் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்துவதால், ஒவ்வாமை ஏற்படாது. மேலும், இப்பொருள்களின் தன்மை கொண்டு தான் மற்ற இரசாயனம் கலந்த பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில், முட்டை, எலுமிச்சை சாறு மற்றும் தயிர் ஆகியவற்றை கொண்டு சிம்பிளான ஹேர்பேக்கை நாம் தயாரித்து விடலாம்.
இதனை பயன்படுத்துவதற்கு முன்பாக, சீப்பை எடுத்து முடியில் இருக்கும் சிக்குகளை அகற்ற வேண்டும். அப்போது தான் ஹேர்பேக்கை முழுமையாக நம்மால் பயன்படுத்த முடியும். முட்டையில் நம் முடி வளர்ச்சிக்கு தேவையான புரதம் மற்றும் பையோட்டின் இருக்கிறது.
Advertisment
Advertisements
எனவே, ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். இத்துடன் எலுமிச்சை சாறு சில துளிகள் மற்றும் தலைக்கு தேவையான அளவு தயிர் சேர்த்து கலக்க வேண்டும். இந்த ஹேர்பேக்கை நம் தலையில் தேய்த்த பின்னர், சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் குளித்து விடலாம்.
இந்த ஹேர்பேக்கை 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தினால் முடி உதிர்வு பிரச்சனை நீங்கி அடர்த்தியாக வளரும்.
நன்றி - That youtuber next door
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.