பாரம்பரியமாக கூந்தலுக்கு நிறம் கொடுப்பதற்கு இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் நம் நாட்டில் இருந்து வந்துள்ளது. மருதாணி, அவுரி போன்ற தாவரங்கள் தலைமுடிக்கு அழகிய நிறத்தை அளிப்பதோடு, கூந்தலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தின.
Advertisment
ஆனால், காலப்போக்கில் கெமிக்கல் ஹேர் டை வருகையால் இந்த முறை சற்று பின்னடைவைச் சந்தித்தது. இருப்பினும், தற்போது கெமிக்கல் ஹேர் டை-யினால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் இயற்கையின் மீதுள்ள ஆர்வம் காரணமாக, மீண்டும் இயற்கையான ஹேர் டை பயன்பாடு அதிகரித்துள்ளது.
இயற்கை ஹேர் டை எப்படி செய்வது என்பது பற்றிய ஒரு சிறிய வீடியோ இது.
Advertisment
Advertisements
இந்த இயற்கை ஹேர் டை கூந்தலுக்கு நிறம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அதன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. பக்க விளைவுகள் குறைவு, சுற்றுச்சூழல் நட்பு போன்ற காரணங்களால் இயற்கையான கூந்தல் சாயங்களைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த தேர்வாகும்