தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம்
வாழைப்பூ இதழ்
கருவேப்பிலை
கடுகு
இண்டிகோ பவுடர்
சின்ன வெங்காயம் சருகு
செய்முறை
ஒரு பெரிய வெங்காயத்தை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னர் வாழைப்பூ இதழை நன்கு காய வைத்து எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து ஜூஸ் பதத்திற்கு நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனை வடிகட்டியில் வடித்து சாறு எடுத்து ஒரு பவுலில் வைக்கவும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கருவேப்பிலையை சேர்த்து கருகருவென்று வறுக்க வேண்டும். அதனுடன் சின்ன வெங்காயம் சருகையும் சேர்த்து வறுக்கவும்.
இது இரண்டும் நன்கு கருகருவென்று வறுபட்டவுடன் அதனுடன் 2 டீஸ்பூன் கடுகு, சிறிது இண்டிகோ பவுடரையும் சேர்த்து வறுக்கவும். இவை அனைத்தும் நன்கு கருகி வறுபட்டு வந்ததும் இதனை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மைய பவுடர் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனையும் ஒரு சல்லடை வைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் வேறு ஒரு இரும்பு கடாயில் வாழைப்பூ வெங்காய சாறு சேர்த்து கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள பவுடரை கொட்டி கிளறவும்.
இது பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் இறக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவைத்து பிரஷ் வைத்து தலையில் தேய்த்தால் ஆறு மாதம் வரை கருமை நிறம் முடியில் இருக்கும். இதனுடன் சிறிது தேங்காய் என்னை சேர்த்து தலையில் தேய்த்து ஒரு ஒரு மணி நேரம் நன்கு ஊற வைத்து குளித்து விட்டு பார்த்தால் முடி அனைத்தும் கருமை நிறமாக மாறிவிடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“