Advertisment

அசிடிட்டி தொல்லையால் அவதியா? தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த தண்ணீரை குடிங்க!

நெஞ்செரிச்சல் தவிர, வயிறு உப்புதல், வயிற்றிலிருந்து ஏப்பம், குமட்டல் ஆகியவை ஆசிட் ரிஃப்ளக்ஸ்-ன் மற்ற பொதுவான அறிகுறிகள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
acidity home remedies

Natural home remedies for getting relief from acidity

உணவைத் தவிர்ப்பது அல்லது சில உணவுகளை உண்பது சில சமயங்களில் அசிடிட்டிக்கு (acidity) வழிவகுக்கும். நெஞ்செரிச்சல் என்று அழைக்கப்படும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), வயிற்றில் ஆசிட்’ உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது.

Advertisment

அதிக உணவை உட்கொள்வது, சாப்பிட்ட உடனேயே படுப்பது, உடல் பருமன், கார்பனேற்றப்பட்ட பானங்கள், காபி அல்லது தேநீர் போன்ற சில பானங்கள் குடிப்பது, புகைபிடித்தல், சிட்ரஸ் பழங்கள், தக்காளி, பூண்டு, வெங்காயம் அல்லது காரமான உணவுகள் போன்ற உணவுகளை உண்பது, ஆஸ்பிரின், மஸ்ல் ரிலாக்சர்ஸ் (muscle relaxers) அல்லது இரத்த அழுத்த மருந்துகள் போன்ற சில மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆகியவை ஆசிட் ரிஃப்ளக்ஸ்க்கான சில பொதுவான ஆபத்து காரணிகள்.

நெஞ்செரிச்சல் தவிர, வயிறு உப்புதல், வயிற்றிலிருந்து ஏப்பம், குமட்டல் அல்லது டிஸ்ஃபேஜியா (தொண்டையில் உணவு சிக்கியிருக்கும் உணர்வு) போன்றவை ஆசிட் ரிஃப்ளக்ஸ்-ன் மற்ற பொதுவான அறிகுறிகள்.

பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் சமீபத்தில் அசிடிட்டியை தடுக்க சில எளிய உணவு ஹேக்குகளைப் பகிர்ந்துள்ளார். உணவுக்கு இடையில் நீண்ட இடைவெளி எடுப்பதை ஒருவர் தவிர்க்க வேண்டும். நேரத்திற்குச் சாப்பிடுங்கள், உங்கள் பசி உணர்வு மற்றும் உங்கள் திருப்தி உணர்வுகளை மதிக்கவும்" என்று அவர் கூறினார்.

அவர் பரிந்துரைத்த எளிய ஹேக்ஸ் இதோ!

* ஒரு கிளாஸ் தண்ணீரில் சில கருப்புத் திராட்சைகளை இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அந்த தண்ணீரை குடியுங்கள். இது மாதவிடாய் முன் நோய்க்குறி (PMS), வீக்கம் மற்றும் அஜீரணத்திற்கும் உதவுகிறது.

* ஊறவைத்த அவல் உடன், தயிர் சேர்த்து காலை 11 மணிக்கு (மதிய உணவு தாமதமானால்) அல்லது மாலை 4-6 மணியளவில் சாப்பிடுங்கள். ஒரு கிண்ணத்தில், ஊறவைத்த போஹா, தயிர் மற்றும் சிறிது கருப்பு உப்பு போட்டு, சாப்பிடுவதற்கு முன் நன்கு கலக்கவும். 

* ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது குல்கந்த் (ரோஜா இதழ்களில் இனிப்பு கலந்து ப்ரீசர்வ் செய்யப்பட்டது) கலந்து, நாள் முழுவதும் பருகவும். நீங்கள் அசிடிட்டியுடன், தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த இரவு பானத்தை நீங்கள் சாப்பிடலாம். வெப்பத்தைத் தணிக்க இது ஒரு நல்ல பானம்.

இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி, அசிடிட்டி தொல்லையில் இருந்து விடுதலை பெறுங்கள்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment