ஓமவல்லி இலை 10 - 15 சேர்த்து... மாசக்கணக்கில் முடி கருப்பாவே இருக்க இப்படி ரெடி பண்ணுங்க!

வீட்டிலேயே இயற்கையான முறையில் எவ்வாறு ஹேர்பேக் தயாரிப்பது என்று இந்தக் குறிப்பில் காணலாம். இதனை பயன்படுத்துவதன் மூலம் தலை முடி மாதக்கணக்கில் கருப்பாகவே இருக்கும்.

வீட்டிலேயே இயற்கையான முறையில் எவ்வாறு ஹேர்பேக் தயாரிப்பது என்று இந்தக் குறிப்பில் காணலாம். இதனை பயன்படுத்துவதன் மூலம் தலை முடி மாதக்கணக்கில் கருப்பாகவே இருக்கும்.

author-image
WebDesk
New Update
Hair dye

முடி உதிர்வு பிரச்சனையை போலவே இளநரை பாதிப்பும் இன்றைய சூழலில் நிறைய பேருக்கு இருக்கிறது. முதுமையை குறிக்கும் விதமாக நரை முடிகள் தோன்றினால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இளம் பருவத்தில் நரை முடிகள் உருவாவதை இன்று பல பேரிடம் பார்க்க முடிகிறது.

Advertisment

நரை முடியை மறைக்க செயற்கையான ஹேர் டை பலவற்றை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றில் சேர்க்கப்பட்டிருக்கும் இரசாயனங்கள் அனைத்தும் பெரும்பாலான நேரத்தில் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றனர்.

இதனை தடுக்க இயற்கையான முறையில் ஹேர்பேக் தயாரித்து அதனை பயன்படுத்தி நரை முடிகளை கருப்பாக மாற்றலாம். அதற்கான ஹோம்மேட் ஹேர்பேக் தயாரிக்கும் முறை குறித்தி இதில் பார்க்கலாம்.

இந்த ஹேர்பேக் தயாரிப்பதற்கு முதலில் ஃப்ரெஷ்ஷான ஓமவல்லி இலைகள் சுமார் 10 அல்லது 15-ஐ இரும்பு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் சாறு முழுவதும் வெளியேறும் வகையில் கைகளால் பிசைந்து கொள்ள வேண்டும்.

Advertisment
Advertisements

இதையடுத்து, இந்த இலைகள் அனைத்தும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். இதை ஒரு புறம் வைத்துவிட்டு, இரண்டு ஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் ஆகிய இரண்டையும் மிக்ஸியில் லேசாக அரைக்க வேண்டும். இதனை, ஊற வைத்திருக்கும் ஓமவல்லி இலைகளுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இவை சுமார் இரண்டு நிமிடங்களுக்கும் மேல் கொதித்து வேக வேண்டும். அதன் பின்னர், அடுப்பை ஆஃப் செய்து விடலாம். இது ஆறிய பின்னர், சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.

தனியாக வடிகட்டிய சாறை, சிறிதளவு அவுரி பொடியுடன் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவை பசை பதத்திற்கு வந்ததும், மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விடலாம். இந்த ஹேர்பேக்கை 15 நிமிடங்களுக்கு காற்று போகாமல் மூடி வைக்க வேண்டும்.

இறுதியாக, இந்த ஹேர்பேக்கை தலையில் தேய்த்து விட்டு, சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் கழுவி விடலாம். இவ்வாறு செய்தால் நரை முடி அனைத்து கருப்பாக மாறி விடும்.

நன்றி - From Vinos Diary Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Grey Hair Simple hair care tips for summer

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: