10 பாதாம் இரவு முழுவதும் ஊறவைத்து: வறண்ட சருமத்துக்கு டீப் மாய்ஸ்சரைசர் இப்படி ரெடி பண்ணுங்க

கடைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த, ரசாயனங்கள் நிறைந்த மாய்ஸ்சரைசர்களுக்கு பதிலாக, நீங்களே வீட்டில் எளிதாக தயாரிக்கக்கூடிய சூப்பர் பாதாம் மாய்ஸ்சரைசர் ரெசிபி இதோ

கடைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த, ரசாயனங்கள் நிறைந்த மாய்ஸ்சரைசர்களுக்கு பதிலாக, நீங்களே வீட்டில் எளிதாக தயாரிக்கக்கூடிய சூப்பர் பாதாம் மாய்ஸ்சரைசர் ரெசிபி இதோ

author-image
WebDesk
New Update
Skin care

Natural homemade moisturizer

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் போன்ற சத்துக்கள் பாதாமில் நிறைந்துள்ளன. இவை உங்கள் சருமத்தை மென்மையாகவும், பொலிவுடனும் வைத்திருக்க பெரிதும் உதவுகின்றன. கடைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த, ரசாயனங்கள் நிறைந்த மாய்ஸ்சரைசர்களுக்கு பதிலாக, நீங்களே வீட்டில் எளிதாக தயாரிக்கக்கூடிய சூப்பர் பாதாம் மாய்ஸ்சரைசர் ரெசிபி இதோ:

Advertisment

தேவையான பொருட்கள்

10-12 பாதாம் - இரவு முழுவதும் ஊறவைத்தது

2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்

Advertisment
Advertisements

2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்

1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய்

2 வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள்

செய்முறை

முதலில், ஊறவைத்த பாதாமின் தோலை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

அரைத்த பாதாம் விழுதை ஒரு பவுலில் போட்டு, அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.

வீடியோவில் காட்டியுள்ளபடி, இந்த கலவையிலிருந்து பாதாமின் பாலை மட்டும் வடிகட்டி எடுக்கவும்.

வடிகட்டிய பாலுடன் கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும்.

இறுதியாக, வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை உடைத்து அதிலுள்ள எண்ணெயை இதனுடன் சேர்க்கவும். வைட்டமின் ஈ ஒரு இயற்கையான பிரிசர்வேட்டிவாக செயல்பட்டு மாய்ஸ்சரைசரை பாதுகாக்க உதவும்.

சுத்தமான மற்றும் காய்ந்த காற்றுப்புகாத டப்பாவில் இந்த மாய்ஸ்சரைசரை ஊற்றி சேமிக்கவும். இந்த மாய்ஸ்சரைசரை நீங்கள் 15 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

நன்மைகள்

இந்த மாய்ஸ்சரைசர் உங்கள் சருமத்தில் ஆழமாக ஊடுருவி ஈரப்பதத்தை அளிக்கிறது.

தொடர்ந்து பயன்படுத்தி வர உங்கள் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும்.

வறண்ட சருமத்தால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.

இந்த இயற்கையான மாய்ஸ்சரைசர் சருமத்தின் நிறத்தை சீராக்க உதவுகிறது.

குளித்தவுடன் அல்லது ஈரமான தோலில் இந்த மாய்ஸ்சரைசரை தடவுவது அதன் உறிஞ்சுதிறனை அதிகரிக்கிறது.

மிக முக்கியமாக, இந்த மாய்ஸ்சரைசர் முற்றிலும் இயற்கையானது மற்றும் எந்தவிதமான தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும் இதில் இல்லை.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: