எண்ணெய்யில் இந்த 2 பொருள் சேர்த்து விளக்கு ஏத்துங்க… பல்லி, கரப்பான் பூச்சி வீட்டை விட்டு ஓடிடும்!
வீட்டில் இருந்து பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை எவ்வாறு சுலபமாக விரட்டலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். இதன் மூலம் நம் வீட்டில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை நம்மால் உறுதி செய்ய முடியும்.
வீட்டில் இருந்து பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை எவ்வாறு சுலபமாக விரட்டலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். இதன் மூலம் நம் வீட்டில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை நம்மால் உறுதி செய்ய முடியும்.
வீட்டை சுத்தமாக பராமரிப்பது மிகவும் சவாலான காரியம். குறிப்பாக, ஒரு வீடு எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு அந்த வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று அர்த்தம்.
Advertisment
ஆனால், நாம் எவ்வளவு சிரமப்பட்டு வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலும் பெரும்பாலான நேரத்தில் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியாது. இதற்காக கடைகளில் இருந்து வாங்கி வரும் செயற்கையான சில பொருட்களை உபயோகித்தாலும் பலன் அளிப்பதில்லை என்று சிலர் கூறுகின்றனர்.
அந்த வகையில், நம் வீட்டில் இருக்கும் சிம்பிளான சில பொருட்களை பயன்படுத்தி பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை சுலபமாக நம்மால் விரட்ட முடியும். இதன் மூலம் நோய்த் தொற்றில் இருந்தும் நம்மை பாதுகாக்க முடியும்.
ஒரு அகர்பத்தியை எடுத்து அதன் மருந்தை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மருந்தை ஒரு அகல் விளக்கில் போட வேண்டும். இத்துடன் ஒரு கற்பூரத்தை பொடியாக்கி கலக்க வேண்டும். இந்த அகல் விளக்கில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதற்குள் ஒரு கற்பூரத்தை அப்படியே வைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இதையடுத்து, அந்தக் கற்பூரத்தை பற்ற வைக்க வேண்டும். அதன் பின்னர், இந்த விளக்கு அணைந்ததும் பல்லி, கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் வைத்து விடலாம். இவ்வாறு இரண்டு நாட்களுக்கு வைத்தால் அதன் வாசனைக்கு பல்லி வராமல் இருக்கும்.