பொதுவாக பெண்களின் மார்பக வளர்ச்சி என்பது நிறைய பருவத்தில் நடக்கிறது. பால்கொடுக்கும் தாய்மார்களுக்கு ஒருவிதமான வளர்ச்சியும். மெனோபாஸ்க்கு பிறகும்கூட ஒரு மந்தமான வளர்ச்சியும் இருக்கிறது. இந்த மாதிரி ஒரு பெண்ணின் உடைய வாழ்நாளில் 6 கட்டத்தில் மார்பக வளர்ச்சியிலும் மார்பகத்தின் அளவிலும் மாற்றம் ஏற்படுகிறது என்று விஞ்ஞான ஆராய்ச்சிகளில் சொல்லப்படுகிறது.
ஒரு சில பெண்களுக்கு மார்பகம் முறையாக வளர்ச்சி அடையவில்லை என்கிற பிரச்னையும், ஒரு சிலருக்கு மார்பக வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது தேவையில்லாமல் கவனஈர்ப்பை ஏற்படுத்துகிறது என்கிற பிரச்னைகளுக்கும் நிறைய பெண்கள் உள்ளாகிறார்கள் என்கிறார் டாக்டர் யோக வித்யா.
ஒரு பெண்குழந்தை சிசு உருவாகி வளரும்போதில் இருந்தே மார்பக வளர்ச்சி தொடங்குகிறது. மார்பக வளர்ச்சி என்பது பெண்கள் பருவம் அடையும்போது வளர்ந்து, அவர்களுடைய 20-22 வயதில் முழுமையாக வளர்ச்சி அடைந்து, திருமணத்திற்குப் பிறகு, கர்ப்ப காலத்தின்போது, அந்த மார்பக வளர்ச்சியின் அளவு கொஞ்சம் மாறுபட்டு, அதன் அளவு பெரிதாகி, அதற்கு பிறகு, அவர்கள் பால் கொடுக்கும் காலத்தில், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஒரு விதமான வளர்ச்சியும், அதற்கு அப்புறம், மெனோபாஸ்க்கு பிறகு, ஒரு மந்தமான வளர்ச்சி என ஒரு பெண்ணின் உடைய வாழ்நாளில் 6 தடவை மார்பக வளர்ச்சி மற்றும் அதன் அளவில் மாறுபடுகிறது என்று விஞ்ஞான ஆராய்ச்சிகளில் சொல்லப்படுகிறது.
பெண்களுக்கு முறையான மார்பக வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான், பொலாக்டின் ஆகிய ஹார்மோன்கள் உதவுகின்றன.
பெண்களுக்கு மாதவிடாய் தொடங்கிய முதல் 14 நாட்களில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாகவும், அடுத்த 14 நாட்களில் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் அதிகமாகவும் இருக்கும் என்று டாக்டர் யோக வித்யா கூறுகிறார்.
இதில், பொலாக்டின் ஹார்மோன் மிகவும் குறைவாக இருந்தால், பெண்களுக்கு மார்பக வளர்ச்சி முறையாக வளர்ச்சி அடைந்து இருக்காது. முறையான மார்பக வளர்ச்சி இல்லாத பெண்கள் ஒரு சிலர், சிலிக்கான் சர்ஜரி, பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொள்கிறார்கள். ஒரு சிலர் மார்பக வளர்ச்சிக்காக ஊசிகளையும் போட்டுக்கொள்கிறார்கள். ஒரு சிலர் மார்பக வளர்ச்சிக்காக மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால், பக்கவிளைவுகளாக, மார்பகத்தில் கட்டிகள் உருவாகும், ஒழுங்கற்ற வடிவத்திற்கு மாறிவிடும், சில சமயம் கேன்சர் வருவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
அதனால், இயற்கையாக மார்பக வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்றால் பொதுவாக ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான், பொலாக்டின் அதிக அளவில் இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடும்போது பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று டாக்டர் யோக வித்யா கூறுகிறார்.
பொதுவாக, பூசணி விதை, ஆளி விதை, உருளைக் கிழங்கு, பீட்ரூட், மாதுளை, பேரிச்சம் பழம் ஆகியவற்றில் இயற்கையாகவே ஈஸ்ட்ரோஜென் இருக்கிறது.
அடுத்து புரொஜெஸ்ட்ரான் எள்ளில் அதிக அளவில் இருக்கிறது தினமும் ஒரு கருப்பு எள் உருண்டை சாப்பிடுவதன் மூலம் இயற்கையாகவே புரொஜெஸ்ட்ரான் கிடைக்கும். அதே போல, சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், இனிப்பு உருளைக் கிழங்கு ஆகியவற்றில் புரொஜெஸ்ட்ரான் இருக்கிறது.
அடுத்து, பொலாக்டின் அதிக அளவில் பூண்டில் இருக்கிறது. அதனால், ஒரு முழு பூண்டை பாலில் வேக வைத்துவிட்டு பூண்டையும் சாப்பிட்டுவிட்டு, பாலையும் குடிக்கலாம். இரண்டிலும் பொலாக்டின் இருப்பதால் மார்பக வளர்ச்சிக்கு உதவும். பால்கொடுக்கும் தாய்மார்களுக்கு பூண்டு பால் சுரக்க உதவும். மீன்களில் சுறா மீனில் பொலாக்டின் அதிக அளவில் இருக்கிறது. இந்த சுறாமீன் தாய்மார்களுக்கு பால் சுறக்க உதவுவதோடு, மார்பக வளர்ச்சிக்கும் உதவும். அதே போல, நேந்திரம் பழம் சாப்பிடலாம்.
வெந்தயத்தை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து அதை தேங்காய் பாலில் வேக வைத்து, அதில் கொஞ்சம் நெய் சேர்த்து, கருப்பட்டி போட்டு வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டுவந்தால் அதில் இருக்கும் பொலாக்டின் மார்பக வளர்ச்சிக்கு உதவும் என்று டாக்டர் யோக வித்யா கூறுகிறார்.
பென்களின் மார்கப வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான், பொலாக்டின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதோடு மட்டுமில்லாமல், உளுந்து தைலம், மயன தைலம் தடவும்போது இயல்பாகவே மார்பக வளர்ச்சி இருக்கும் என்று டாக்டர் யோக வித்யா கூறுகிறார்.