மழை காலம், வெயில் காலம் என எப்போதுமே கொசுக்களின் தொல்லை அதிகமாக தான் இருக்கும். இதற்காக கடைகளில் இருந்து செயற்கையான கொசு விரட்டிகளை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், அதற்காக பணம் அதிகமாக செலவாவதுடன், அவை சுவாச பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அந்த வகையில் இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருள்களை கொண்டு கொசு விரட்டி எப்படி செய்வது என தற்போது பார்க்கலாம். கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் அளவிற்கு காபி போடி இரண்டையும் ஒன்றாக சேர்த்து, அத்துடன் சிறிது தண்ணீர் கலந்து பசை பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.
இந்தக் கலவையை பிரியாணி இலையின் இரண்டு பகுதியிலும் தேய்த்து காய வைக்க வேண்டும். இவை நன்றாக காய்ந்த பின்னர், கொசு விரட்டியாக செயல்படும்.
அதன்படி, மாலை நேரத்தில் இந்த இலையை பற்ற வைத்து, அதில் இருந்து வெளியாகும் புகையை வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும். இந்த புகையின் வாசனைக்கு கொசுக்கள் வராமல் தடுக்கப்படும்.
இப்படி இயற்கையான முறையில் கொசு விரட்டி பயன்படுத்துவதால், செயற்கையான கொசு விரட்டிகளை வாங்கும் பணம் ஏராளமாக மிச்சமாகும். இதில் இரசாயனங்கள் சேர்க்காததால், சுவாச பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது.