உங்கள் சமையலறையில் சின்னச் சின்ன பூச்சிகள் தொல்லையா? எவ்வளவு முயற்சி செய்தாலும் பூச்சிகள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கின்றனவா? அப்படியானால், இந்த எளிய மற்றும் மிகவும் பயனுள்ள டிப்ஸ் உங்களுக்காகத்தான்.
Advertisment
தேவையான பொருட்கள்:
டிஸ்யூ பேப்பர் - 1 நாப்தலின் பால்ஸ் - 2 ரப்பர் பேண்ட் - 1 வேப்ப எண்ணெய் - அரை ஸ்பூன்
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு டிஸ்யூ பேப்பரை எடுத்து அதில் இரண்டு நாப்தலின் பால்ஸை வைக்கவும். நாப்தலின் பால்ஸ்களை லேசாக உடைத்து விடவும். டிஸ்யூ பேப்பரை நன்றாக மடித்து, ரப்பர் பேண்டால் இறுக்கமாக கட்டவும்.
இப்போது, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சுத்தமான வேப்ப எண்ணெயில் இருந்து அரை ஸ்பூன் எடுத்து, இந்த டிஸ்யூ பேப்பர் கட்டுக்கு மேலே ஊற்றவும்.
இதை உங்கள் சமையலறையில், குறிப்பாக பூச்சிகள் அதிகம் வரும் இடங்களிலோ, அல்லது சமையலறை ஜன்னல், கதவு ஓரங்களிலோ வைத்து விடவும். நாப்தலின் மற்றும் வேப்ப எண்ணெயின் தனித்துவமான வாசனையானது எந்தவிதமான சின்னஞ்சிறிய பூச்சியையும், பாசிப் பூச்சியையும் உங்கள் கிச்சனுக்கு அருகில் கூட வரவிடாது.
இந்த எளிய முறையை பயன்படுத்தி உங்கள் சமையலறையை பூச்சி தொல்லையிலிருந்து விடுவித்து, ஆரோக்கியமான சூழலை பெறுங்கள்