மோசமான தூக்கம், பரம்பரை, வயது, மன அல்லது உடல் அழுத்தம், நீண்ட திரை நேரம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உணவுக் குறைபாடுகள் ஆகியவை கருவளையங்களை ஏற்படுத்தும்.
உண்மையில், கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது, பொதுவாக வயதான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும் முதல் இடம் இதுவாகும். எனவே ஒரு சீரான உணவை உட்கொள்வதோடு கூடுதலாக சில வீட்டு வைத்தியங்களும், அவற்றின் தோற்றத்தைத் தடுக்க அல்லது குறைக்க உதவும்.
சந்தையில் ஏராளமான ஐ கிரீம்கள் உள்ளன, ஆனால் தவறான கிரீம் பயன்படுத்துவது, நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். ஆயுர்வேத மருத்துவர் டிம்பிள் ஜங்தா, கரு வளையங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான சில சிறந்த வீட்டு வைத்தியங்களை இங்கு பகிர்ந்துள்ளார்.
உருளைக்கிழங்கு

ஒரு பச்சை உருளைக்கிழங்கை அரைத்து, சாற்றை வடிகட்டி கண்களைச் சுற்றி தடவவும். உருளைக்கிழங்கில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இது உங்கள் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
இதில் என்சைம்கள், வைட்டமின் சி, ஸ்டார்ச் உள்ளது, இது உங்கள் கண்களைச் சுற்றியுள்ள தோலுக்கு ஊட்டமளிக்கிறது, மேலும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
கற்றாழை

இதில் அலோசின் என்ற வேதிப்பொருள் நிறைந்துள்ளது, இது நிறமியைக் குறைக்க உதவுகிறது. கற்றாழை ஹைட்ரேட் செய்கிறது, கண்களுக்குக் கீழே உள்ள தோலை மிருதுவாகவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. அதிக அழுத்தம் கொடுக்காமல் உங்கள் மோதிர விரலைப் பயன்படுத்தி கற்றாழையை கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்யலாம். நீங்கள் எலுமிச்சை சாறு, தேன் அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து இதை செய்யலாம்.
பாதாம் எண்ணெய்

இந்த எண்ணெய் வைட்டமின் ஈ, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் வளமான மூலமாகும், மேலும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளது.
இது உங்கள் கண்களைச் சுற்றியுள்ள மென்மையான தோலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மோதிர விரலால் லேசான மசாஜ் செய்வது சருமத்தின் மேற்பரப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இதனால் டார்க் சர்கிள்ஸ், சோர்வு அறிகுறிகள் மற்றும் நேர்த்தியான கோடுகளின் தோற்றத்தை குறைக்கிறது. மேலும், பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து கண்களைச் சுற்றி தடவலாம்.
குங்குமப்பூ

2-3 குங்குமப்பூவை குளிர்ந்த பாலில் ஊறவைத்து, பஞ்சை பயன்படுத்தி கண்களைச் சுற்றி தடவவும். குங்குமப்பூ கண்களைச் சுற்றியுள்ள தோலை ஒளிரச் செய்து கருவளையங்களைக் குறைக்க உதவுகிறது. குங்குமப்பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன.
கிரீன் டீ பேக்ஸ்

பினாலிக் கலவைகள் நிறைந்த குளிர்ந்த டீ பேக்ஸ் எடுத்து 10-15 நிமிடங்கள் கண்களின் மேல் வைத்தால், கருவளையங்களின் தோற்றத்தை குறைக்க உதவும். காஃபின் உங்கள் கண்ணைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களை சுருக்கவும் மற்றும் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தவும் உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“