ரொம்ப நேரம் நின்று கொண்டே வேலை... மஞ்சளுடன் உப்பு; இந்த வீட்டு வைத்தியம் ட்ரை பண்ணுங்க!

சூடான ஒத்தனத்தின் வெப்பம் இரத்த ஓட்டத்தை தூண்டி தசைகள் தளர்ச்சியடைய செய்கிறது. இதனால் நீண்ட நேரம் நின்றபடியே வேலை செய்ததால் உருவான தசை இழுப்பு, வலி, மற்றும் வீக்கம் ஆகியவை குறையும்.

சூடான ஒத்தனத்தின் வெப்பம் இரத்த ஓட்டத்தை தூண்டி தசைகள் தளர்ச்சியடைய செய்கிறது. இதனால் நீண்ட நேரம் நின்றபடியே வேலை செய்ததால் உருவான தசை இழுப்பு, வலி, மற்றும் வீக்கம் ஆகியவை குறையும்.

author-image
Mona Pachake
New Update
download (87)

இன்று பலரும் நீண்ட நேரம் நின்றபடியே வேலை செய்ய வேண்டிய சூழலில் உள்ளனர். குறிப்பாக ஆசிரியர்கள், கடை ஊழியர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட பலர் தினமும் மணிநேரங்கள் நின்றபடியே வேலை செய்கின்றனர். இதனால் கால் பாதங்களில் வலி, வீக்கம், தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் தோன்றுவது இயல்பாகி விட்டது. மருத்துவ சிகிச்சைகளோ, வலிநிவாரண மருந்துகளோ இன்றி, வீட்டிலேயே இயற்கையான முறையில் இதற்கு தீர்வு காணலாம் என்று பாரம்பரிய வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisment

கால் வலி தீர்க்க எளிய வீட்டுவைத்தியம்

காலில் வலி ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு போகாமல் இருக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள் பெரும் நிவாரணம் தருகின்றன. அதில் மிகவும் எளிதானதும், விரைவான பலன் அளிப்பதும் மஞ்சள் மற்றும் உப்பைக் கொண்டு செய்யும் சூடான ஒத்தனமாகும்.

ஒரு சிறிய கடாயை எடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். இது வெப்பமடைந்ததும், அதை ஒரு சுத்தமான பருத்தித்துணியில் போட்டு பொட்டலம் போல கட்டி எடுக்கவும்.

அந்தப் பொட்டலம் இன்னும் சூடாக இருக்கும் போதே கால் பாதங்களில் — குறிப்பாக வலி இருக்கும் பகுதியில் — மெதுவாக ஒத்தனம் கொடுக்க வேண்டும். இதை தினமும் மாலை வேளைகளில் அல்லது வேலை முடிந்தவுடன் செய்வது சிறந்தது.

Advertisment
Advertisements

ஏன் இது வேலை செய்கிறது?

மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) என்ற இயற்கை கூறு எதிர்ப்பு அழற்சி (anti-inflammatory) தன்மை கொண்டது. இது கால் தசைகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. அதே சமயம் உப்பு உடலின் ஈரப்பதத்தை வெளியேற்றி, தசைகளில் ஏற்பட்டிருக்கும் சளி அல்லது வலி உணர்வை குறைக்க செய்கிறது.

சூடான ஒத்தனத்தின் வெப்பம் இரத்த ஓட்டத்தை தூண்டி தசைகள் தளர்ச்சியடைய செய்கிறது. இதனால் நீண்ட நேரம் நின்றபடியே வேலை செய்ததால் உருவான தசை இழுப்பு, வலி, மற்றும் வீக்கம் ஆகியவை குறையும்.

பயன்படுத்தும் முறை

  • தினமும் இரவில் ஒரு முறை இதைச் செய்யலாம்.
  • ஒத்தனத்திற்குப் பிறகு கால் பாதங்களை சுத்தமான நீரால் மெதுவாக துடைக்கவும்.
  • அதன்பின் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது எள்ளெண்ணெய் தடவினால் தசைகள் மென்மையாகி வலி விரைவில் குறையும்.
  • மிகக் கடுமையான வலி இருப்பின் மருத்துவரின் ஆலோசனையும் அவசியம்.

மஞ்சள் மற்றும் உப்பு கொண்டு செய்யும் இந்த எளிய வீட்டு வைத்தியம், நவீன வாழ்க்கை முறையில் அதிக நேரம் நின்று வேலை செய்யும் நபர்களுக்கு மிகப் பெரிய நிவாரணமாக இருக்கும். உடனடி நிவாரணம் தருவதோடு, எந்தவித பக்க விளைவுகளும் இல்லாதது இதன் சிறப்பு. இயற்கை வழி சிகிச்சைகளில் இது மிகவும் எளிமையானதுமாகவும், பயனுள்ளதுமாகவும் கருதப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: