/indian-express-tamil/media/media_files/2025/03/26/R4ljOsd312G11813QhlE.jpg)
வீட்டில் இருக்கும் பெரிய பிரச்னை இந்த எலிப்பிரச்சனை தான். இந்த எலித் தொல்லையால் நிறைய நோய்களும் மனிதருக்கு பரவுகின்றன. எனவே அதை விரட்ட வேண்டியது முக்கியம். வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களைக் கொண்டே எலிகளை எப்படி விரட்டலாம் என்பது குறித்து இங்கே காணலாம்.
எலிகளால் பரவக் கூடிய நோய்கள்:
லெப்டோபைரோஸிஸ் (எலிக்காய்ச்சல்) என்ற நோய் எலியின் சிறுநீரின் மூலம் மனிதருக்கு பரவுகிறது. இந்த கிருமி மனித உடலில் நுழைந்து இறப்புக்கே வழி வகுத்து விடும். ஹெப்படைடிஸ் ஈ, பிளேக் நோய் போன்ற பல கிருமிகள் எலியின் வழியாக மனிதருக்கு பரவுகின்றன. எலியின் உதிர்கின்ற முடி கூட மிகவும் மோசமான நோய்களை உற்பத்தி செய்யும். ஆஸ்துமா போன்ற கொடிய நோய்க்கான மூலாதாரமாக இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். வீட்டில் இருக்கும் சில இயற்கையான பொருட்களைக் கொண்டே எலியை விரட்டியடிக்கலாம்
புதினா:
எலிகளுக்கு புதினா போன்ற நறுமண வாசனை பிடிக்காது. எனவே எலி வரும் இடத்தில் ஒரு சிறிய பஞ்சில் புதினாவை அங்கே வையுங்கள். குறிப்பாக வீட்டின் மூலை முடுக்குகளில் வையுங்கள். இதை ஓரிரு நாட்களுக்கு தொடர்ந்து செய்து வாருங்கள். இந்த வாசனை பிடிக்காமல் எலியும் ஓடிப் போய் விடும். உங்க வீடும் நறுமணத்துடன் இருக்கும்.
வெங்காயம்:
வெங்காயம் எப்பொழுதுமே ஒரு நெடிய மணம் கொண்டது. எனவே எலி வரும் இடத்தில் நறுக்கிய வெங்காயத்தை வைத்து விட்டால் நெடிய மணத்துக்கு வராது ஓடி விடும். அதே நேரத்தில் வெங்காயம் சீக்கிரம் அழுகிப் போய் விடும் என்பதால் 2-ம் நாள் புதிய வெங்காயத்தை மாற்றுங்கள்.
மிளகுப்பொடி:
இது செலவே இல்லாத ஒரு முறை. சமையலறை பொருளை வைத்தே எலியை விரட்டி விட முடியும். எனவே எலி வரும் இடங்கள், மூலை முடுக்குகளில் மிளகுப் பொடியை தூவி வைத்தால் போதும் அந்த நெடிய மணத்தால் இந்த பக்கம் திரும்பவே திரும்பாது.
பிரியாணி இலை:
பிரியாணி இலையின் நெடிய மணம் எலிகளுக்கு பிடிக்கும். ஆனால் அதை சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் எலிகள் இறந்து விடும். எனவே எலி வரும் இடங்களில் பிரியாணி இலை 2யை போட்டு வைக்கலாம்.
நாப்தலீன் உருண்டைகள்:
நாப்தலீன் உருண்டை வீட்டில் உள்ள பூச்சிகளை விரட்ட சிறந்த ஒன்று. வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலிகள் இருந்தால் அதற்கு இது சிறந்தது. எனவே எலி இருக்கும் இடங்களில் இந்த பாட்ஷா உருண்டைகளை போட்டு வைக்கலாம். இது பாய்சன் என்பதால் போடும் போது குழந்தைகள் எடுக்காத வகையில் போட்டு வையுங்கள்..
எலி பரவலைத் தடுக்க வழிகள்:
எந்தவொரு உணவுப் பொருட்களையும் வெளியில் வைக்காதீர்கள். எலிகளின் எச்சங்களை உடனே சுத்தம் செய்து விடுங்கள். இல்லையென்றால் இது மற்ற பூச்சிகளை ஈர்க்க கூடும். எலிக்கு இருண்ட, மங்கலான, குப்பைகள் இருக்கும் இடங்கள் என்றால் பிடிக்கும். எனவே வீட்டை எப்பொழுதும் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் வைத்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.