பலர் தங்கள் தலைமுடி மென்மையாகவும், நேராகவும் இருக்க விரும்புகிறார்கள். இதற்காக பார்லருக்கு சென்று முடியை ஸ்ட்ரெய்ட்னிங் செய்து கொள்கின்றனர். ஆனால், முடியை நேராக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உங்கள் சருமம் எப்படி நச்சுகளை வெளியேற்றுகிறதோ, அது போல நச்சுப் பொருட்களை உறிஞ்சும் விடும், இது பெரும்பாலும் தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்புப் பொருட்களில் அடிக்கடி நிகழ்கிறது. இதனால்தான் எதை உண்ண முடியுமோ அதை தோலில் தடவுங்கள் என்கிறோம், என்று ஆயுர்வேத நிபுணர் டிம்பிள் ஜங்தா கூறினார்.
மேலும் வீட்டில் நீங்களே செய்யக்கூடிய சில முடி பராமரிப்பு வைத்தியங்களையும் ஆயுர்வேத நிபுணர் பகிர்ந்து கொண்டார்.
வெந்தயம்
/tamil-ie/media/media_files/uploads/2021/03/fenugreek-GettyImages-654405216.jpg)
1 டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலை, அதை அரைத்து சம அளவு தயிருடன் கலக்கவும். இதை ஹேர் மாஸ்க் அல்லது ஷாம்புவாகப் பயன்படுத்தலாம். இது உச்சந்தலையில் ஊட்டமளிக்கிறது மற்றும் முடியை நேராகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
மோர்
இது இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. பெண்கள் தங்கள் தலைமுடியை கழுவ வெண்ணெய் கடையும் போது அல்லது நீர்த்த தயிர் ஆகியவற்றிலிருந்து வடிகட்டிய தண்ணீரைப் பயன்படுத்தினர். இது பாக்டீரியல் என்சைம்களின் வளமான மூலமாகும், இது உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்கவும், முடியை வளர்க்கவும், மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகிறது
அரிசி நீர்
/indian-express-tamil/media/media_files/Ajl7EGtp4jwK1i35qLan.jpg)
சீனாவில் பெண்கள் பெரும்பாலும் தங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு புளித்த அரிசி தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள். இது கூந்தலுக்கு ஊட்டமளித்து, நேராகவும், இயற்கையான நிறத்திலும் வைக்கும்.
வெறுமனே, அரிசி தண்ணீரை உங்கள் தலைமுடியில் ஊற்றி, உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் வரை தண்ணீரை அப்படியே விட்டுவிட்டு, வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவவும். வாரம் ஒரு முறையாவது இதைச் செய்யலாம்.
உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்க இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தும்போது, கடுமையான ரசாயனங்களை அடிக்கடி பயன்படுத்துவதால் குவிந்திருக்கும் ரசாயனங்களை அகற்றவும் அவை உதவுகின்றன, என்று மருத்துவர் டிம்பிள் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“