scorecardresearch

பாம்பைக் கூட சமாளிப்போம்; பல்லின்னா பயம்… அப்போ நீங்க இதைப் பண்ணுங்க!

சாதாரண வீட்டு பல்லிகள், விஷமற்றவை, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதவை.

Natural ways to get of lizard at your home
Natural ways to get of lizard at your home

நம் வீட்டில் காணப்படும் பல்லி, ஒரு குளிர் ரத்தப் பிராணி. அண்டார்டிகா கண்டம் தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பல்லிகள் காணப்படுகின்றன.

சாதாரண வீட்டு பல்லிகள், விஷமற்றவை, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதவை. மேலும் அவை ஈக்கள், கொசுக்கள், கரையான்கள், கரப்பான் என பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. எனவே அவற்றை கொல்ல முயற்சிப்பதற்குப் பதிலாக அவற்றை துரத்துவது நல்லது.

நீங்கள் பல்லிகளுக்கு பயப்படுகிறீர்கள் என்றால், உங்கள் வீடுகளில் பல்லிகள் வராமல் தடுக்கும் வழிகளை இங்கே பார்க்கலாம்.

வீட்டில் பல்லிகளை அகற்றுவதற்கான வழிகள் இங்கே:

பூண்டு

பூண்டு வாசனை பல்லிகளை விரட்டும். நீங்கள் அதை ஒரு சிறிய டேபிள் ஃபேனுக்கு அருகில் வைத்து அறை முழுவதும் பரவ செய்யலாம். உங்கள் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களைச் சுற்றி பூண்டு பற்களை தொங்கவிடுவது பல்லிகளை விரட்டும்.

நாப்தலீன் பந்து

நாப்தலீன் பந்துகள் பல்லிகள் மற்றும் பல வகையான பூச்சிகளை விரட்டும். ஆனால், குழந்தைகள் அணுகக்கூடிய இடங்களில் அவற்றை வைக்கமால் கவனமாக இருங்கள்.

முட்டை ஓடு

முட்டை ஓடுகளிலிருந்து வரும் வாசனையை பல்லிகள் விரும்புவதில்லை. வீட்டைச் சுற்றி அடிக்கடி பல்லிகள் காணப்படும் இடங்களில் முட்டை ஓடுகளை வைக்கவும். முட்டை நறுமணத்துடன் கூடிய எந்த பகுதியிலும் பல்லி வராது.

பெப்பர் ஸ்பிரே

நீங்கள் கருப்பு மிளகு கொண்டு வீட்டியே ஒரு பெப்பர் ஸ்பிரே செய்ய முடியும். ஸ்பிரே பாட்டிலில், அரைத்த மிளகு பொடி அதனுடன் தண்ணீர் சேர்க்கவும். பெப்பர் ஸ்ப்ரே பல்லியின் உடலில் எரியும் உணர்வை உருவாக்குகிறது, அது அவற்றை விலக்கி வைக்கும்.

குளிர்ந்த நீர்

குளிர்காலத்தில் பல்லிகளை ஏன் பார்க்க முடியவில்லை என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?  ஏனென்றால், உங்களில் சிலரைப் போலவே, பல்லிகள் கூட குளிரை ஏற்றுக் கொள்வதில்லை.

குளிர் இரத்த உயிரினமான, பல்லிக்கு குறைந்த வெப்பநிலை ஏற்றதாக இருக்காது. எனவே, நீங்கள் பல்லிகளைத் தடுக்க விரும்பினால், அவற்றை வாழத் தகுதியற்றதாக மாற்றுவதை உறுதிசெய்ய வேண்டிய நேரம் இது.

உங்கள் வீட்டிலிருக்கும் பல்லி, உங்களுக்கு அசவுகரிய உணர்வை ஏற்படுத்தினால், இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி, அந்த விசித்திரமான உயிரினங்களை விலக்கி வைக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Natural ways to get of lizard at your home

Best of Express