இதை மட்டும் பண்ணுங்க.. இனி கொசு உங்க வீட்டு பக்கமே வராது

உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை கொசுக்கள் இல்லாமல் வைத்திருக்க சில இயற்கை வழிகள் இங்கே உள்ளன.

உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை கொசுக்கள் இல்லாமல் வைத்திருக்க சில இயற்கை வழிகள் இங்கே உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Natural ways to get rid of mosquitoes

கொசுக்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் அவை கடித்தால் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். கொசுக்கள் பெருகும் இடமாக இருப்பதால், உங்கள் வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அருகில் குப்பைகள் மற்றும் தண்ணீர் தேங்குவதை அனுமதிக்கக் கூடாது.

Advertisment

இந்த கொடிய பூச்சிகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை கொசுக்கள் இல்லாமல் வைத்திருக்கவும் சில இயற்கை வழிகள் இங்கே உள்ளன.

வெங்காயம், கடுகு எண்ணெய், சாம்பிராணி மட்டும் கொண்டு நீங்களே வீட்டில் ரசாயனமில்லாத இயற்கையான கொசு விரட்டி தயாரிக்கலாம்.

எப்படினு பாருங்க?

Advertisment
Advertisements
publive-image

முதலில், ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் சூடாக்கவும். இதில், ஒரு ஸ்பூன் கெட்டி சாம்பிராணி  பொடியை கலக்கவும். இரண்டு நிமிடம் சூடானதும் அடுப்பை அணைக்கவும்.

இப்போது ஒரு வெங்காயத்தை எடுத்து, சிறு துண்டுகளாக வெட்டி சிறிய உரலில் போட்டு இடித்து கரடுமுரடாக பேஸ்ட் செய்து கொள்ளவும்.

இந்த பேஸ்டை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதில் ஏற்கெனவே காய்ச்சிய கடுகு எண்ணெய்யை ஊற்றி, நன்கு கலந்து ஜன்னல் ஓரம், வீடு வாசல், வீட்டுக்குள் கொசு நுழையும் இடங்களில் வைக்கவும். இப்படி செய்தால், கொசு உங்கள் வீட்டுக்குள் வராது.

துளசி சாறு

publive-image

துளசி சாறு வலுவான லார்விசைல் பண்புகளைக் கொண்டுள்ளது, எனவே தேங்கி நிற்கும் நீர்நிலைகள் மற்றும் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய பிற பகுதிகளில் செறிவூட்டப்பட்ட துளசி சாற்றை தெளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். துளசி, லாவெண்டர், லெமன்கிராஸ், சாமந்தி மற்றும் புதினா போன்ற தாவரங்கள் பயனுள்ள கொசு விரட்டிகளாக செயல்படுகின்றன.

அதேபோல, எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அதில் கிராம்புகளை குத்தி வீட்டின் மூலை முடுக்குகளில் வைக்கவும். இந்த மணம் கொசுக்களுக்கு அலர்ஜி என்பதால்’ அவற்றை வரவிடாமல் தடுக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: