நமது உதடுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது என்றால் நமது நம்பிக்கை அதிகமாகும். நிறைய பெண்களுக்கு உதடு கருமை மிக முக்கியமான ஒரு பிரச்னையாக உள்ளது. இதற்கு என்ன காரணம்? வீட்டில் இருந்தபடியே சரி செய்யக் கூடிய முறைகள் என்ன? அதைப்பற்றி விளக்குகிறார் மருத்துவர் ஜெயரூபா.
அதிகமான நரம்புகள் இருக்கக்கூடிய உதடு பகுதியில் 3 முதல் 4 அடுக்குதான் இருக்கும். இதனால், எளிதில் சுற்றுப்புற சூழலில் வெப்பமோ அல்லது குளிராகவோ இருந்தால் உதடு பகுதி பாதிக்கப்படும். வெளிப்புறத்திலுள்ள மாசுபாடு காரணமாகவும் உதடு பகுதி பாதிப்படையக் கூடும். ஒரு சிலருக்கு அலர்ஜி பிரச்னை இருந்தால், அடிக்கடி உதடு பகுதி வீக்கமடைந்து காணப்படும். ஹார்மோன் பிரச்சனை, கர்ப்பிணி, மாதவிடாய் காலகட்டத்திலும் உதட்டுப் பகுதியில் இருக்கக்கூடிய தோல் எளிதில் கருமை நிறம் அடையக்கூடும் என்கிறார் மருத்துவர் ஜெயரூபா.
ஹார்மோன் மாத்திரைகளால் கூட இந்த பிரச்சனைகள் வந்து இருக்கலாம். அடிக்கடி உதட்டை கடிப்பது, டூத் பேஸ்ட், சத்து குறைபாடு, புகைப்பழக்கம் மற்றும் உதட்டில் பயன்படுத்தக் கூடிய காஸ்மெட்டிக்ஸ் கூட அலர்ஜி ஏற்பட்டு உதடு கருமை நிறத்தில் மாறலாம். அல்சர் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு தொண்டை மற்றும் வாய் பகுதியில் ஏற்படும் புண்களுடன் உதட்டுப் பகுதியிலும் புண்கள் ஏற்படக் கூடும். அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். இதனால், நமது தோலில் ஹைட்ரஜன் அளவு சீராகும் என்கிறார் மருத்துவர் ஜெயரூபா.
வைட்டமின் ஏ மற்றும் சி, வைட்டமின் பி இருக்கக்கூடிய உணவுப் பொருட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து சரிசெய்யலாம். கால் டீஸ்பூன் அளவுக்கு சர்க்கரை, அதனுடன் தேன் அல்லது பால் கலந்து உதட்டுப் பகுதியில் தேய்க்கும்போது அதில் இருக்கக்கூடிய இறந்த செல்களை அகற்றும். அடுத்ததாக தேங்காய் எண்ணெய் உடன் வெண்ணெய் சேர்த்து உதட்டுப் பகுதியில் லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் உதட்டுப் பகுதியில் இருக்கக் கூடிய கருமை நிறம் மாறும் என்கிறார் மருத்தவர் ஜெயரூபா.
பீட்ரூட் சாறு உடன் நெய் அல்லது பட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து உதட்டுப் பகுதியில் அப்ளை செய்ய வேண்டும். இதனால், கருமை நிறம் மறைந்து உதடு இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறும். பாதாம் எண்ணெய் சேர்த்தும் மசாஜ் செய்யலாம் என்கிறார் மருத்துவர் ஜெயரூபா.