கல்லணை வேந்தன் கரிகாலனுக்கு புகழாரம்.. திருச்சியில் 1000 சிறுமிகள் நாட்டியாஞ்சலி..! | Indian Express Tamil

கல்லணை வேந்தன் கரிகாலனுக்கு புகழாரம்.. திருச்சியில் 1000 சிறுமிகள் நாட்டியாஞ்சலி..!

கரிகால சோழ பெருவளத்தான் 2000ஆம் ஆண்டுகளுக்கு முன்பு தறி கட்டு ஓடிய காவிரி ஆற்றின் குறுக்கே கல், மண், மரம் போன்ற பொருட்களை கொண்டு கல்லணையை கட்டினார்.

கல்லணை வேந்தன் கரிகாலனுக்கு புகழாரம்.. திருச்சியில் 1000 சிறுமிகள் நாட்டியாஞ்சலி..!
நாட்டியாஞ்சலி விழாவில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு சீல்டு மற்றும் உலக சாதனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கல்லனை கட்டிய வேந்தன் கரிகால சோழனை போற்றும் வகையில் தமிழக பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலா துறை இணைந்து பசுமையும் பரதமும் இணைந்த நாட்டியாஞ்சலி ஜெட்லீ உலக சாதனை நிகழ்ச்சி இன்று காலை கல்லணையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது.

கல்லணை சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் திருச்சி-தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் பாலமாகவும் விளங்குகிறது.
இந்த கல்லணை கரிகால சோழ பெருவளத்தான் 2000ஆம் ஆண்டுகளுக்கு முன்பு தறி கட்டு ஓடிய காவிரி ஆற்றின் குறுக்கே கல், மண், மரம் போன்ற பொருட்களை கொண்டு கல்லணையை கட்டினார்.

நவீன வசதிகள் இல்லாத காலத்தில் கட்டப்பட்ட கல்லணை இன்றும் தமிழர்கள் மற்றும் சோழர்களின் பெருமையை உலகளவில் பறைசாற்றுகிறது.

இது தமிழகத்திற்கு மட்டுமல்லாது நம் நாட்டிற்கு மிகப்பெரிய பெருமையாகும். இந்த நிலையில் சோழ அரசர்களில் ராஜராஜசோழன் பெருமைகள் மட்டுமே உலக அளவில் பறைசாற்றப்பட்டு வருகின்றன.

ஆனால் கரிகால சோழனின் பெருமைகளை யாரும் கண்டு கொள்வது இல்லை. உலகிற்கு முதன் முதலில் அணை கட்டிய பெருமையை கொண்ட கரிகாலசோழ பெருவளத்தானின் பெருமையை நினைவு கூறும் வகையில், கரிகால சோழன் கட்டிய கல்லணையில் தமிழக பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத் துறையும் சார்பில் கல்லணையில் பசுமையும், பாரதமும் நாட்டியாஞ்சலி மற்றும் ஜெட்லி உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை தஞ்சை மாவட்ட மேயர் ராமநாதன் திருச்சி மாவட்ட மேயர் அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இறைவனும் இயற்கையும் ஒன்று என்பார்கள். ஆனால் நாட்டிய கலைஞர்கள் பெரும்பாலும் இறைவனை போற்றும் வகையில் நாட்டிய அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

ஆனால் கல்லணையில் நடந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் இயற்கையான காவிரி தாய், கரிகால சோழனின் பெருமை, விவசாயம் ஆகிய மூன்று பெருமைகளை போற்றும் வகையில் இசைக்கப்பட்ட மூன்று பாடல்களுக்கு 1000 நாட்டிய கலைஞர்கள் நாட்டியம் ஆடி இயற்கைக்கு பெருமை சேர்த்ததோடு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

இந்த நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள 60 நாட்டிய பள்ளிகளை சேர்ந்த 1000 சிறுமிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சிவசக்தி அகடாமி நிறுவனர் மீனா சுரேஷ் வரவேற்றார்.

தஞ்சை ஆடல்வல்லான் காஞ்சனாதேவி, காவேரி கலை அரன் அரகட்டளை வஜ்ரவேல் உட்பட பலரும் கலந்துகொண்டனர்,
நாட்டியாஞ்சலி விழாவில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு சீல்டு மற்றும் உலக சாதனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் திருச்சி மேயர் அன்பழகன், “உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பருவநிலை பாதித்துள்ளது. பசுமை மற்றும் இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும்” என்றார்.

தஞ்சை மேயர் ராமநாதன், கல்லணை கல்லால் கட்டப்பட்டது உங்களின் பாதங்கள் பட்டதால் பாதங்களால் இந்த அணையை கட்டிய கரிகால சோழன் ஆத்மா மகிழும். தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படம் சோழர்களின் பெருமையை பறைசாற்றுவதாகவும் கூறியதோடு நடந்து வரும் நவராத்திரி விழா பெண்களை
வணங்குவது ஆகும். நானும் உங்களை வணங்குகிறேன்” என்றார்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Natyanjali of 1000 girls was held in trichy