காவிரி டெல்டா பகுதியில் உள்ள நவக்கிரக கோயில்களை உள்ளடக்கிய நவக்கிரக கோயில் பேருந்து பயணத்திற்கான பெரும் தேவையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம், ஏப்ரல் 1 முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும், இந்த சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஒருவருக்கு ரூ. 750 என்ற விலையில் கோயில் பயணத்திற்கான டிக்கெட்டுகளை TNSTC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது மொபைல் செயலியிலோ பதிவு செய்யலாம் என்று போக்குவரத்து பிரிவு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 24 முதல் வார இறுதி நாட்களில் தொடங்கப்பட்ட நவக்கிரக கோவில் சுற்றுலா பொதுமக்களிடம், குறிப்பாக பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து பிரிவு கடந்த வாரம் வியாழன் அன்றும் சுற்றுப்பயணத்தை நடத்தத் தொடங்கியது.
தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோடை விடுமுறையின் சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, கும்பகோணம் நகரின் 60 கிமீ சுற்றளவில் அமைந்துள்ள நவக்கிரக கோயில்களை உள்ளடக்கும் வகையில், வார நாட்களில் கோயில் பயணத்தை TNSTC நீட்டித்துள்ளது.
’பயணத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கோயிலின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக கோயில் சுற்றுலா வழிகாட்டிகளை நாங்கள் நியமித்துள்ளோம். சிறப்பு பஸ்சில் நடத்துனர் இல்லை.
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் அதிகாலை 5 மணிக்குப் பயணம் தொடங்கும். காலை உணவு மற்றும் மதிய உணவு இடைவேளையுடன் நவக்கிரக கோவில்களையும் பார்த்துவிட்டு, அதே நாளில் இரவு 8 மணிக்கு பஸ் டெர்மினஸ் திரும்பும்” என்று ஒரு அதிகாரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“