நவதானிய சுண்டல் தயாரிக்க தேவையான பொருட்கள் :
சிவப்பு மற்றும் பச்சை பட்டாணி, வெள்ளை சுண்டல், பச்சைப்பயறு, காராமணி, தட்டைப்பயிறு, அவரை கொட்டை, கொள்ளு, ராஜ்மா, - தலா 3 டேபிள்ஸ்பூன்.
கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - அரை சிட்டிகை.
அரைக்க: தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - சிறிய துண்டு, சோம்பு - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு.
செய்முறை:
தானியங்கள் அனைத்தையும் நன்றாக சுத்தம் செய்து 7 மணிநேரம் ஊறவைத்து ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும். குக்கர் சூடு ஆறியவுடன் தண்ணீரை முழுவதும் வடித்து விட்டு எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணை ஊற்றி,, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய் சேர்த்து வதக்கி, நன்கு பொரிந்ததும், வேக வைத்து வைத்துள்ள கடலை கலவையை சேர்த்து, கொஞ்சம் உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கலந்து, பின் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு முறை கலந்து இறக்கினால் நவதானிய சுண்டல் தயார்.
புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் கால்சியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் சுண்டலில் காணப்படுகின்றன, இது உடலை பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. ஊறவைத்த சுண்டலை அப்படியே சாப்பிடலாம். இந்த ஊறவைத்த சுண்டலை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. சுண்டல் சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கிறது. இதனை சாப்பிட்டால், சிலருக்கு மதியம் வரைக்கும் பசிக்காது. அந்த அளவுக்கு ஹெவியான உணவு, காலை நேரத்தில் எடுப்பது நல்லது என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.