/indian-express-tamil/media/media_files/2025/08/06/thoppul-cleaning-2025-08-06-17-05-49.jpg)
தொப்புள் கிளீன் பண்றது ரொம்ப முக்கியம்… இவ்வளவு பிரச்னைகள் இருக்கு; டாக்டர் ஷர்மிகா
உடலின் ஒவ்வொரு பாகத்தையும் சுத்தமாக பராமரிப்பது ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியம். ஆனால், நம்மில் பலர் கவனிக்க மறக்கும் பகுதி தொப்புள். இதனை சுத்தம் செய்யாமல் விடுவது, சூடு உடல் போன்ற பல உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார் டாக்டர் ஷர்மிகா.
தொப்புள் அழுக்கினால் ஏற்படும் பிரச்னைகள்:
தொப்புள் அழுக்கின் காரணமாக சில குறிப்பிட்ட உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் கடுமையான அடிவயிற்று வலி மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகளுக்குத் தொப்புள் அழுக்கும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆண்களுக்கு நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் (உதாரணமாக, கார் ஓட்டுநர்கள், அலுவலக ஊழியர்கள்) எதிர்கொள்ளும் சில உடல்நலப் பிரச்னைகளும் இதனால் ஏற்பட வாய்ப்புள்ளது.
பாரம்பரிய முறையில் தொப்புளைச் சுத்தம் செய்யும் வழிகள்:
தேவையான பொருட்கள்: சுத்தமான, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய். தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறை (ஞாயிற்றுக்கிழமை) சுத்தமான நல்லெண்ணெயைத் தொப்புளில் விட்டு, மெதுவாகத் தேய்க்கவும். இவ்வாறு செய்யும்போது, பல வருடங்களாகச் சேர்ந்த அழுக்குகள் சிறிய கற்கள் போல் வெளிவரும். தொப்புளைச் சுத்தம் செய்யும்போது, நகங்களால் கீறி காயம் ஏற்படுத்தாமல் மெதுவாக விரல்களால் தேய்த்துச் சுத்தம் செய்வது அவசியம் என்கிறார் டாக்டர் ஷர்மிகா.
தொப்புளில் ஏதேனும் சிறிய புண்கள் அல்லது கட்டிகள் இருந்தால், நல்லெண்ணெய்க்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்க்குப் புண்களை ஆற்றும் தன்மை இருப்பதால், அது காயங்களை விரைவாகக் குணப்படுத்த உதவும். இந்த எளிய பழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.