இரவு தூங்கும் முன் தொப்புளில் ஒரு சொட்டு நல்லெண்ணெய் விடுங்க… மூட்டு வலி குறையும்; டாக்டர் பொற்கொடி
இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக தொப்புளில் எண்ணெய் விட்டால் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று மருத்துவர் பொற்கொடி தெரிவித்துள்ளார். அவற்றை இப்பதிவில் காண்போம்.
இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக தொப்புளில் எண்ணெய் விட்டால் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று மருத்துவர் பொற்கொடி தெரிவித்துள்ளார். அவற்றை இப்பதிவில் காண்போம்.
ஒரு நாளில் சுமார் 1 நிமிடம் ஒதுக்கினால் கூட நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை சுலபமாக மேம்படுத்த முடியும் என்று மருத்துவர் பொற்கொடி தெரிவித்துள்ளார். அதற்கான டிப்ஸை தற்போது பார்க்கலாம்.
Advertisment
Navel oiling அல்லது நாபி சிகிச்சை என்ற ஒரு முறை பின்பற்றப்பட்டு வருவதாக மருத்துவர் பொற்கொடு கூறுகிறார். அந்த வகையில் இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக எந்த எண்ணெய்யை தொப்புளில் வைத்தால், என்ன பயன்கள் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாதாம் எண்ணெய்யை இரவு உறங்கச் செல்வதற்கு முன்னால் தொப்புளில் வைத்தால் சருமம் பொலிவாகும் என்று கூறப்படுகிறது. இதேபோல், நல்லெண்ணெய் மூட்டு வலிகளை குறைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இவை எலும்புகளை வலிமையாக்குகின்றன.
மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இரவு தூங்குவதற்கு முன்னால் தொப்புளில் விளக்கெண்ணெய் வைக்கலாம். இதன் மூலம் மலச்சிக்கல் தொல்லை நீங்கி, செரிமான மண்டலம் சீராக இயங்கும். இது தவிர, வேப்பெண்ணெய்யை தொப்புளில் வைத்தல் முகத்தில் பருக்கள் வருவது கட்டுப்படும். கூடுதலாக, சரும பாதிப்புகளை குணப்படுத்தும் ஆற்றல் வேப்பெண்ணெய்க்கு இருக்கிறது.
Advertisment
Advertisements
எண்ணெய் தவிர நெய்யையும் தொப்புளில் வைக்கலாம். இது செரிமானத்தை சீராக்குவதுடன், உதடுகள் உலர்ந்து போவதை தடுக்கின்றன. முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள், தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் வைக்கலாம். இந்த எண்ணெய் அனைத்தையும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர் பொற்கொடி குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - Dr.Porkodihari Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.