/indian-express-tamil/media/media_files/2025/09/28/download-39-2025-09-28-12-08-17.jpg)
அம்மன் வழிபாடுகளில் மிகவும் சிறப்புக்குரியது நவராத்திரி வழிபாடாகும். வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்பட்டாலும், புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியையே அதிகமானவர்கள் கொண்டாடுவது வழக்கம். இது முப்பெரும் தேவியர்களின் அருளையும், அவர்களுக்குள் அடக்கமான முப்பெரும் தேவர்களின் அருளையும் பெறுவதற்குரிய சிறப்பான காலம் என்பதால் நவராத்திரி விழா மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.
நவராத்திரி என்பது திரி சக்தியான அம்பிகையை ஆராதிக்க மிக முக்கியமான, புனிதமான காலமாகக் கருதப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் விரதம் இருந்து அம்பிகையை உளமார வழிபட்டால், வாழ்க்கையில் உள்ள அனைத்து துன்பங்கள், பாபங்கள் விலகி, அம்பிகையின் அருளால் பல நன்மைகள் ஏற்படும் என்பது ஆன்மிக நம்பிக்கை.
பண்டிதர்கள் சொல்லுவதுபோல், நவராத்திரியின்
- முதல் மூன்று நாட்களில் துர்கை தேவியாக,
- அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியாக,
- கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியாக
- அம்பிகையை பாவித்து பூஜிக்கப்படுகிறது. இதனால் முப்பெரும் தேவியரின் அருளையும் முழுமையாகப் பெறலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22ம் தேதி துவங்கி, அக்டோபர் 01ம் தேதி சரஸ்வதி பூஜையுடன் நிறைவடைகிறது. அக்டோபர் 02ம் தேதி விஜயதசமி விழா கொண்டாடப்பட உள்ளது. நவராத்திரி வழிபாட்டினை நான்கு விதமாக மேற்கொள்ளலாம். கொலு அமைத்து, கலசம் அமைத்து, படம் வைத்து, அகண்ட தீபம் ஏற்றி வைத்து என நான்கு முறையில் கொண்டாட முடியும். நவராத்திரி கொலு அமைப்பவர்கள் எப்படி கொலு வைக்க வேண்டும் என்பதை நடிகர் ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ் ஒரு நேர்காணலில் மிக அழகாக விவரித்துள்ளார்.
கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடுபவர்கள், சிலர் முந்தைய நாளான மகாளய அமாவாசை நாளிலேயே கொலு பொம்மைகளை அடுக்க துவங்கி விடுவார்கள். இன்னும் சிலர் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து மூன்று நாட்களுக்கு முன்பே அடுக்க துவங்கி விடுவார்கள்.
கொலு பொம்மைகள் அடுக்க நல்ல நேரம் - செப்டம்பர் 21ம் தேதி காலை 6 முதல் 11.50 வரை. அன்றைய தினம் காலையிலேயே பொம்மைகளை அடுக்கி முடித்து விட்டால் பொம்மைகள் எடுக்கி முடித்து, அதே நேரத்தில் வழிபாட்டினை துவக்கலாம். கொலு பொம்மைகளை மேலே சொன்ன நேரத்திற்குள் அடுக்க முடியாது என்பவர்கள், மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்து நவராத்திரி வழிபாட்டினை துவக்கிக் கொள்ளலாம்.
இதை பற்றி அவர் பேசுகையில் "முதலில் மரப்பாச்சி பொம்மைகள் தால் வைக்க வேண்டும். அதன் பிறகு தான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும். மேலே கஜலக்ஷ்மி பொம்மை வைக்க வேண்டும். நான் குழந்தையாக இருக்கும் போதிலிருந்து எங்கள் வீட்டில் கொலு வைப்பார்கள். நான் எங்கயாவது பார்த்தல் காகாக இருந்தால் உடனே வாங்கிவிடுவேன். ஆனால் இப்போது கொஞ்சம் வாங்குவதை நிறுத்திவிட்டேன். எங்கள் அம்மா பண்ணுவதை பார்த்து முதலில் களிமண்ணில் செய்து பார்த்தோம். அப்படி தான் இவ்வளவு அழகாக வைக்க பழகினோம். இந்த வரிசையில் தான் வைக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தது எங்க அம்மா தான்.
நான் 5 வயது குழந்தையாக இருக்கும் போதிலிருந்து இதே இடத்தில் தான் இருக்கிறேன். நம்முடைய வாழக்கி இவ்வளவு பிசியாக சென்றுகொண்டிருக்கும் போது கொலு வைப்பதென்பது நம்முடைய மனதிற்கு நிம்மதி தரும். நவராத்திரி என்றாலே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறம் தான். திங்கள் கிழமை வெள்ளை நிறம், செவ்வாய் அறைக்கு நிறம், புதன் கிழமை பச்சை நிறம், வியாழன் மஞ்சள் நிறம், வெள்ளி கிழமை நீலம், சனி கிழமை கருப்பு, ஞாயிறு சூரியனின் நிறம் தான். இது தான் நவராத்திரியின் நிறம்.
என் கொலுவில் நிறைய விநாயகர் இருப்பார். நான் பயங்கர விநாயகர் பிரியை தான் சிறு வயதிலிருந்தே. முதலில் தவழ்வதிலிருந்து தொடங்கி அதன் பிறகு கடைசியில் தான் சுவாமி சிலைக்கு வர வேண்டும்." என்று மிகவும் அழகாக விளக்கியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.