By: WebDesk
Updated: October 10, 2018, 11:16:24 AM
Navratri 2018 special
Navratri 2018 : நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 19-ந்தேதி விஜயதசமி வரை 10 நாட்கள் நடக்கிறது. வட இந்தியாவில் துர்கா பூஜை என்று அழைக்கபடும் இந்த நவராத்தி 10 நாட்கள் விஷேசமாக கொண்டாடபடும்.
நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் ஓன்பது வகைகளில் படைக்க வேண்டும். நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள்.
இந்த ஆண்டு நவராத்திரிக்கு புதுவரவாக பஞ்சாமிர்த பெருமாள், பாகுபலி விநாயகர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் குழந்தைகளை கவரும் வகையில் கண்கவர் கார்ட்டூன் பொம்மைகளும் விற்பனைக்கு வந்துள்ளது. நவராத்திரி பண்டிகைக்காக ஒவ்வொரு ஆண்டும் புது பொம்மைகளை வாங்க வேண்டும் என்ற சம்பிரதாயம் மக்களிடையே உண்டு. அதற்கு ஏற்றார் போல இந்த ஆண்டு புதுவரவாக உள்ள பொம்மைகளை ஏராளமானோர் வாங்கிச் செல்கின்றனர்.