நவராத்திரி இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் நேரடி அர்த்தம் ஒன்பது இரவுகள். இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவதுர்காவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி பெரும்பாலும் செப்டம்பர் – நவம்பர் மாதங்களில் வருகிறது. இது இலையுதிர்காலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாறும் நேரம். இந்த நேரத்தில் பூமியின் வடக்கு கோளம் சூரியனை விட்டு விலகி இருக்கும். இதனால் பகல் ஒளி என்பது குறைவாகவும் இரவு அதிகமாகவும் காணப்படும். இதனால் வடக்கு பகுதியில் குளிர் பரவும். சூரிய ஒளி பூமியில் படும் நேரம் குறையும். இந்த குளிரால் மனித உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு நோய்கள் வர வழி வகுக்கும். அதில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரு பயிற்சியாகவே இந்த நவராத்திரி விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்து புராணங்கள் படி, அரக்கர்கள் அரசன் மகிஷாசூரன் மூன்று லோகங்கலான பூமி, சொர்க்கம் மற்றும் நரகத்தை தாக்கி தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த நேரத்தில், அவனை வதம் செய்ய மாபெரும் சக்தி தேவைப்பட்டது. இதற்கான காரணம், படைக்கும் கடவுளான பிரம்மா ஒரு பெண்ணால் மட்டுமே மகிஷாசரனை வீழ்த்த முடியும் என்ற வரம் அளித்துள்ளார்.
எனவே மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரும் தங்கள் சக்திகளை ஒன்றிணைத்து, அரக்கர்கள் அரசனான மகிஷாசுரனை வதம் செய்ய துர்கா தேவியை அதாவது, பராசக்தியை உருவாக்கினார்கள் என்று இந்து புராணங்கள் கூறுகிறது. 15 நாட்கள் நீண்ட போருக்கு பிறகு, பராசக்தி அவனை மாளைய அமாவாசை அன்று திரிசூலத்தால் வதம் செய்தார். அதற்குப் பிறகான 9 நாட்களுக்கு, பாராசக்தியை 9 வெவ்வேறு வடிவங்களில், அவதாரங்களில் வழிபடத்துவங்கினார்.
விரதம் இருக்கும் முறை ?
இந்த முறைப்படி இந்த 9 நாட்களும் மக்கள் இடைவிடாத விரதம் செய்கிறார்கள். காலையில் இருந்து விரதம் இருப்பதால் உடலில் உள்ள கூடுதல் கொழுப்புகள் கரைய வழிசெய்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் கூடுதல் கொழுப்பு உடலில் இருப்பதால்தான் நோய்கள் பல வருகின்றன. அவர் இந்த குளிர் காலத்தில் பெரிதளவில் கரையும் வாய்ப்புள்ளது. உடல் எடை குறைக்க போராடுபவர்கள் இந்த 9 நாள் விரதத்தை நிச்சயம் எடை குறைப்பிற்கு பயன்படுத்தலாம்.
நவராத்தி 2023 எப்போது?
ஜோதிடத்தின்படி, சித்ரா நட்சத்திரம் அக்டோபர் 14ம் தேதி மாலை 4.24 மணிக்கு தொடங்கி அக்ரோபர் 15ம் தேதி மாலை 6.13 வரை இருக்கும். மறுபுறம், அபிஜீத் முஹுர்த்தம் அக்டோபர் 15 அன்று காலை 11.04 முதல் 11.50 வரை இருக்கும்.
அதனால் இந்த இரண்டு ஷரதியா நவராத்திரி அக்டோபர் 15 முதல் அக்டோபர் 24 வரை இருக்கும். இம்முறை நவராத்திரி ஒன்பது நாட்கள் நடைபெறுவது சிறப்பு. நவராத்திரி சனி, செவ்வாய்க்கிழமைகளில் தொடங்கும் போது அம்மன் குதிரையில் வலம் வருவார்.
துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்கள்
அக்டோபர் 15ம் தேத ஷைலபுத்ரி வழிபாடும், அக்டோபர் 16ம் தேதி பிரம்மச்சாரிணி வழிபாடும், அக்டோபர் 17ம் தேதி மா சந்திராகாண்டா வழிபாடும், அக்டோபர் 18ம் தேதி மா கூஷ்மாண்டா வழிபாடும், அக்ரோபர் 19ம் தேதி மா ஸ்கந்தமாதா வழிபாடும் நடைபெறும்.
அக்டோபர் 20ம் தேதி காத்யானி வழிபாடும், அக்டோபர் 21ம் தேதி மா காலாத்திரி வழிபாடும், அக்டோபர் 22ம் தேதி மா சித்திதாத்தி வழிபாடும், அக்டோபர் 23ம் தேதி மகாகெளரி வழிபாடும், அக்டோபர் 24ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.