scorecardresearch

நயன்தாரா இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன? ஜோதிடர் விளக்கம்

, இந்த இரண்டு குழந்தைகளும் தங்கள் பெற்றோரின் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டு வந்து அவர்களுக்கு புதிய திசையை வழங்குவார்கள் என்றும் ஜோதிடர் கூறினார்.

Nayanthara and Vignesh Shivan blessed with twin boys Uyir and Ulagam find out what their names mean
விக்னேஷ் சிவன், நயன்தாரா

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 2022 ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில் அவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாய்-தந்தை ஆகியுள்ளனர். நேற்று (அக்.9) ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளின் கால்களை முத்தமிடும் வகையில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அதில், “நானும் நயனும் தந்தை, தாய் ஆகிவிட்டோம். கடவுளின் ஆசிர்வாதத்தால் எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. எங்களது உயிர், உலகம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்தக் குழந்தைகளுக்கு உயிர், உலகம் எனப் பெயரிட்டுள்ளனர். இதில் உயிர் என்றால் மிகவும் கவர்ச்சிகரமானவர், உலகை தன்வசப்படுத்தக் கூடியவர், இனிமையான மற்றும் ஆடம்பரமான முறையில் வாழ்பவர்.

தங்களிடம் உள்ளவற்றை அழகாக்குபவர் என பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
அதேபோல் உலகம் என்றால் சுறுசுறுப்பானவர், ஆற்றல் மிக்கவர், தைரியமானவர் மற்றும் ஆர்வமுள்ளவர் என்றார்.
மேலும், “எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து முன்னேறுகிறார்கள்” என்றார்.

தொடர்ந்து, இந்த இரண்டு குழந்தைகளும் தங்கள் பெற்றோரின் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டு வந்து அவர்களுக்கு புதிய திசையை வழங்குவார்கள் என்றும் ஜோதிடர் கூறினார்.
மேலும், அவர்களின் பெயர்களின் அடிப்படையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் வாழ்க்கையில் உயிர் மற்றும் உலகம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றார்.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் ஒருவரான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உள்ளனர். இருவரும் நானும் ரவுதான் என்ற படத்தின்போது முதலில் சந்தித்தனர்.
இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றினர்.

எனினும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியொன்றிலும் இருவரும் ஒன்றாக தோன்றினர்.
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தங்களது காதலை வெளிக்கூறி, 2022 ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Nayanthara and vignesh shivan blessed with twin boys uyir and ulagam find out what their names mean