Advertisment

இவ்வளவு நாளா இதுதான் டயட் நினைச்சேன், ஆனா இப்போ: நயன்தாரா வெயிட் மேனேஜ்மெண்ட் ஜர்னி

இப்போது, சத்தான, சுவையான ஹோம் மேட் உணவை நான் விரும்புகிறேன். நான் மகிழ்ச்சியுடன், குற்ற உணர்வு இல்லாமல் சாப்பிடுகிறேன், இனி ஜங்க் உணவுக்கு ஆசைப்படுவதில்லை.

author-image
WebDesk
New Update
Nayanthara

Nayanthara

அன்பையும் அறிவையும் பகிர்ந்துகொள்வதற்கு இது ஒருபோதும் தாமதமாகாது என்பதால் இதை இப்போது பகிர்கிறேன். இதில் நான் பலன் அடைந்திருந்தால், மற்ற அனைவருக்கும் அது கிடைக்க விரும்புகிறேன். ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஒரு நல்ல உணவு அவசியம், குறிப்பாக என்னைப் போன்ற ஒரு நடிகைக்கு…

Advertisment

என்னைப் பொறுத்தவரை, ஷேப் ஆக இருப்பது எப்போதும் சமநிலை, நிலைத்தன்மை மற்றும் என் உடலைக் கேட்பது பற்றியது. ‘டயட்’ என்பது என்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதும், நான் விரும்பாதவற்றைச் சாப்பிடுவதும் என்று நான் நினைத்தேன்.

ஆனால் இப்போது அது, கலோரிகளை எண்ணுவது பற்றி அல்ல என்று எனக்குத் தெரியும்; இது ஊட்டச்சத்துக்களை எண்ணுவது மற்றும் சரியான அளவுகளில் பலவகையான உணவுகளை உண்பது பற்றியது. இது ஒரு வாழ்க்கை முறை, தற்காலிக தீர்வு அல்ல.

இப்போது, சத்தான, சுவையான ஹோம் மேட் உணவை நான் விரும்புகிறேன். நான் மகிழ்ச்சியுடன், குற்ற உணர்வு இல்லாமல் சாப்பிடுகிறேன், ஜங்க் உணவுக்கு ஆசைப்படுவதில்லை. இது நான் உணவைப் பார்க்கும் விதத்தை மாற்றிவிட்டது, ஊட்டமாகவும், சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.

நாம் சாப்பிடுவது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வை கணிசமாக பாதிக்கும் என்று நான் நம்புகிறேன். அடுத்தடுத்த வாரங்களில் எனது பயணத்தைப் பகிர்வதன் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற உங்களை ஊக்குவிப்பேன் என்று நம்புகிறேன், நன்றாக சாப்பிடுவதாலும், உணவுடன் நேர்மறையான உறவைப் பேணுவதாலும் கிடைக்கும் மகிழ்ச்சி மற்றும் ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துவோம்…

இவ்வாறு நயன்தாரா தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.  

இந்த போஸ்ட்டுக்கு பதிலளித்த நயன்தாராவின் ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவால், உங்களைப் போன்ற ஒருவருடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் பயணத்தை மிக அழகாக இறக்கி வைத்துள்ளீர்கள், என்றார். 

முன்முன் கனேரிவால், ஜவான் படம் முதல் நயன்தாராவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

சரிவிகித உணவு ஏன் முக்கியம்?

அடிப்படை, சமச்சீர் உணவை உட்கொள்வது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார் உணவியல் நிபுணர் ஸ்ருதி கே பரத்வாஜ் (chief dietician at Zydus Hospitals, Ahmedabad).  

நம் உடல் உகந்ததாக செயல்பட தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ஆற்றலுக்கான கார்போஹைட்ரேட்டுகள், தசை பழுது மற்றும் வளர்ச்சிக்கான புரதங்கள், பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு கொழுப்புகள், நோயெதிர்ப்பு ஆதரவுக்கான வைட்டமின்கள் மற்றும் சரியான உடலியல் செயல்முறைகளை பராமரிப்பதற்கான தாதுக்கள் ஆகியவை இதில் அடங்கும்.

Mediterranean diet

நன்கு சமநிலையான உணவு உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, உடல் பருமன் மற்றும் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கிறது. இது கொலஸ்ட்ரால் அளவு மற்றும் ரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதன் மூலம் இருதய ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களைச் சேர்ப்பது நார்ச்சத்து அளிக்கிறது, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

சமச்சீர் உணவு மனநலத்திற்கும் பங்களிக்கிறது. மீன் மற்றும் நட்ஸ்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மனநிலை ஒழுங்குமுறையுடன் தொடர்புடையவை.

போதுமான நீரேற்றம், வளர்சிதை மாற்றம் மற்றும் நச்சு நீக்கம் உட்பட பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமானது, என்று உணவியல் நிபுணர் ஸ்ருதி பகிர்ந்து கொண்டார்.

Read in English: Nayanthara opens up about ’embracing nourishment’: ‘Now, I know it’s not about counting calories’

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment