பல பிரபலங்கள் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்திற்காக’ உடல் எடையை குறைக்க அல்லது அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், அவர்களின் அனைத்து ஊட்டச்சத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதை உறுதிசெய்யும்’ பிரத்யேக டயட்டைப் பின்பற்றுகிறார்கள்.
சில சமயங்களில், பிரபலங்கள்’ சமூக ஊடகங்களில் தங்களைப் பின்தொடர்பவர்களுடன், தங்கள் உணவு முறைகளின் விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், மற்ற நேரங்களில் அவர்களின் ஊட்டச்சத்து நிபுணர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.
அந்த வகையில், பிரபல ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவால் (Munmun Ganeriwal) சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் "அவரது நடிகை வாடிக்கையாளருக்கு மிகவும் பிடித்த ஒரு ரெசிபியை" பகிர்ந்து கொண்டார்.
இருப்பினும், வேறு எதையும் வெளிப்படுத்தாமல், "அவர் யார் என்பதை அறிய, அதன் செய்முறையை, எனது புத்தகமான ’யுக்தஹார்: தி பெல்லி அண்ட் பிரைன் டயட்’ (Yuktahaar: The Belly And Brain Diet) அத்தியாயம் 10 இல் உள்ளதைப் பாருங்கள்." என்று கூறினார்.
அந்த "நடிகை கிளையன்ட்" யார் என்பதைக் கண்டறிய, நாங்கள் தோண்டி எடுத்தோம் - உங்களுக்காக.
கனேரிவாலின் புத்தகத்தின்படி, தேங்காய் ஸ்மூத்திக்கான (coconut smoothie) ரெசிபியை விரும்புவது நடிகை நயன்தாரா தான். இந்த பானத்தை அவரது உணவுத் திட்டத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியபோது, நயன்தாராவுக்கு இது மிகவும் பிடித்துவிட்டது. இது அவரது காலை /மாலை உணவு விருப்பங்களில் ஒன்றாகும்" என்று கனேரிவால் புத்தகத்தில் எழுதியிருந்தார்.
நீங்களும் அதை முயற்சி செய்ய விரும்புகிறீர்களா? அதை எப்படி செய்வது என்பது இங்கே.
தேவையான பொருட்கள்
2 கப் - தேங்காய் தண்ணீர்
1 கப் – தேங்காய்
½ கப் - தேங்காய் பால்
சர்க்கரை
சிட்டிகை - இலவங்கப்பட்டை தூள்
சிட்டிகை - ஏலக்காய் தூள்
செய்முறை
*ஒரு பிளெண்டர் ஜாரில் தேங்காய் தண்ணீர், தேங்காய், தேங்காய்ப்பால் மற்றும் சர்க்கரையை சுவைக்கு ஏற்ப சேர்க்கவும்.
*கட்டிகள் இல்லாத அளவுக்கு மிருதுவாகும் வரை நன்கு கலக்கவும்.
*தலா ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய் தூள், ஐஸ் க்யூப்ஸ் (விரும்பினால்) சேர்த்து ஒரு கிளாஸில் ஊற்றவும்.
*கனேரிவாலின் கூற்றுப்படி, கோடை மாதங்களில் குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் இருக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாரம்பரிய ஸ்மூத்திஸ் அல்லது பானங்கள் காலை உணவாக உட்கொள்ளப்படுகின்றன. "ஆன்லைனில் ஆடம்பரமான ஸ்மூத்தி ரெசிபிகளைத் தோண்டி எடுப்பதற்குப் பதிலாக இதுபோன்ற பல சமையல் குறிப்புகளைத் தேடுமாறு நான் பரிந்துரைக்கிறேன்," என்று அவர் புத்தகத்தில் கூறினார்.
ஸ்மூத்தி சுவையானது மட்டுமல்ல, கொழுப்புகளை வளர்சிதைமாற்றம் செய்யவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், ஆரோக்கியமான குடலை பராமரிக்கவும், நார்ச்சத்து நிறைந்ததாகவும் இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“