நயன்தாரா, தமிழ் சினிமாவின் ஐகானிக் ஹீரோயின். நடிப்பு, தயாரிப்பு, பிசினஸ் உமன் என தொடர் ஆச்சரியங்களை நிகழ்த்துகிறார்.
ஏற்கெனவே நயன்தாரா பிரபல சரும மருத்துவர் ரெனிட்டா ராஜன் என்பவருடன் சேர்ந்து, சொந்தமாக `தி லிப் பாம் கம்பெனி (The Lip Balm Company)' பிராண்டை நடத்தி வருகிறார். இது, உலகின் மிக அதிகமான லிப் பாம் ரகங்களை கொண்ட முதல் நிறுவனம் ஆகும். இந்த தொழில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
இப்போது நயன்தாரா ’9 Skin’ என்ற பெயரில் ஸ்கின் கேர் பொருட்களை தயாரிக்கும் புதிய பிராண்டை அறிமுகப்படுத்தி இருக்கிறார்…
‘ஆறு வருட அயராத முயற்சியையும் அன்பையும் வெளிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை மற்றும் நவீன அறிவியலால் ஆதரிக்கப்படும் சூத்திரங்களுடன், உங்களைப் போலவே தனித்துவமான தயாரிப்புகளை நாங்கள் க்யூரேட் செய்து வருகிறோம். இது உங்கள் செல்ஃப் கேர் ரொட்டினை மேம்படுத்தும்.
இந்த செல்ஃப் லவ் பயணத்தில் எங்களுடன் இணைந்து ஆரோக்கியமான, ஒளிரும் சருமத்திற்கு வணக்கம் சொல்லுங்கள்!’ என்று நயன்தாரா தன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்…
இந்த புதிய தொழிலுக்காக சிங்கப்பூர் தொழிலதிபர் டெய்சி மோர்கன் உடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கைகோர்த்து உள்ளனர்.
முன்னதாக 2018-ம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 100 பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்த தென்னிந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் நடிகை, நயன்தாரா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“