அமானுஷ்யம் நிறைந்த NAZCA கோடுகள்: 2000 ஆண்டுகளுக்கு முன்னே எப்படி இதை உருவாக்கினார்கள்?

ப்போது புலப்பட்டது அங்கே மறைந்து கிடந்தது அடுத்த ஆச்சர்யம்

By: Updated: August 19, 2018, 02:37:44 PM

லியோ

பண்டைய நாகரீகத்தை சேர்ந்த பழம்பெரும் மக்கள் நாம் என்ற போதும், நம்மை போலே தொன்மையும், பழமையும் அதனோடு கூடிய அமானுஷ்யத்தை யும் தன்னகத்தே கொண்ட பல மக்கள் கூட்டம் இன்றளவும் இவ்வுலகின் பல பகுதிகளில் நிலைத்து நிற்கின்றன. மைல்கணக்கில் நீண்டு நிற்கும் ஓவியங்கள், நரபலிக்கென்று தனியே ஒதுக்கப்பட்ட ஒரு கிராமம் என்று பல திடுக்கிடும் அமானுஷ்யங்கள் நிறைந்த இடமே Nazcaஇன மக்களின் வாழ்விடமான PERU.

Peru, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கணவு இல்லம், அகழ்வாய்வில் புரட்சி கண்ட இடம். அந்த peru நாட்டின் தென்கிழக்கே 200 மைல் தொலைவில் அமைந்துள்ள இடமே NAZCA. Rio Grande de Nazca என்ற நதிக்கரை பள்ளத்தாக்கு நாகரீகத்தை சேர்ந்த மக்களே இந்த மக்கள். உலகின் எந்த பகுதியிலும் இல்லாத விசித்திர உடை, கைவினை பொருட்கள் மற்றும் Geoglyphs (தரையில் வரையப்படும் பெரிய அளவிலான ஓவியங்கள்) எனப்படும் ஓவியங்களுக்கு பெயர் போனவர்கள்.

கி.பி 100ம் ஆண்டு முதல் 750 A.D வரை வாழ்ந்த இந்த இன மக்கள் காடுகளை பெருமளவில் அழித்ததால் ஏற்பட்ட வெள்ளத்தினாலே அழிந்து போனதாக கூறப்படுகிறது.

சரி வாருங்கள்… இவர்கள் அவ்விடத்தில் மறைத்து வைத்திருக்கும் அமானுஷ்யத்தை காண்போம். 1926ம் ஆண்டு PERUவை சேர்ந்த Toribio Mejia Xesspe என்ற தொல்பொருள் ஆய்வாளர், இங்கே வந்து பல மைல் தூரம் நீண்டு கிடக்கும் இக்கோடுகளை ஆராய்ந்து NAZCA LINES என்ற பெயரிட்டார். 30மைல் தூரம் வரை நீண்டு கிடந்த அந்த கோடுகள் அவரை ஆச்சர்யத்துக்கு உள்ளாகின. இவை வெறும் கோடுகளை போல இல்லை என்பது மட்டும் அவருக்கு தெரிந்திருந்தது. அவர் கணித்தது உண்மையே…. 1930ம் ஆண்டுகளில் PERUவின் வான்பகுதியில் வட்டமிட்ட வானுர்திகள் பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அக்கோடுகளை கண்ட போது அதிர்ந்து போயினர். அன்று தான் உலகம் அறிந்தது, அது வெறும் கோடுகள் அல்ல மாறாக அவை உருவங்கள் என்று. குரங்கு, தேரை, வண்ணத்து பூச்சி, ஹம்மிங் பறவை, திமிங்கலம் என்று பட்டியல் நீள்கிறது. ஆச்சர்யத்தின் உச்சமாக ஒரு மலை மீது படர்ந்து கிடந்த 1200அடி நீளமுள்ள ஒரு Alien போன்ற உருவம்.

விண்ணில் பல ஆயிரம் அடி தூரம் சென்ற பின்னர் மட்டுமே தெளிவாய் தெரியும் ஓவியங்கள் என்றால் 2000 ஆண்டுகளுக்கு முன்னே எப்படி இதை உருவாக்கினார்கள்?. இதுவரை 70 விலங்குகள், சில பூக்கள் என்று மொத்தம் 300 ஓவியங்கள் இந்த நிலப்பரப்பில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களுள் சில இன்றைய Empire State Buildingஐ விட மிக பெரியதாக கணக்கிடப்பட்டுள்ளது. Geoglyphs என்று பெயரிடப்பட்ட இந்த ஓவியங்கள், தரையில் உள்ள பாறைகளை நகர்த்தி, நிலங்களை தோண்டி அதன் மூலம் உருவாக்கப்பட்டவை.

இவ்வகை வடிவமைப்புகள் உலகில் எப்பகுதியிலும் இல்லை என்பது குறிப்பிட தக்கது. மேலும் உலகில் மழைபெறும் நிலங்களில் NAZCA வருடத்திற்கு வெறும் 20நிமிடம் மட்டுமே மழை பெறும் நிலமாக திகழ்கிறது. ஆகையால் அந்த பாறைகளும், நிலமும் வெளிர் நிறமடைந்து 2000ஆண்டுகளாக இன்றும் அக்கோடுகள் மறையாமல் இருக்க காரணமாக திகழ்கிறது.

பல ஆராய்ச்சியாளர்கள் இக்கோடுகளை நட்சத்திரங்களின் பாதை மற்றும் சூரியனின் பாதையில் அமைத்திருப்பதாக கூறினாலும், Johan Reinhard என்ற National Geographyயை சேர்ந்த அறிஞர் இக்கோடுகள் புவியியலோ அல்லது வானியல் தொடர்பு கொண்ட கோடுகள் அல்ல மாறாக தண்ணீர், விளைச்சல் சார்ந்த கோடுகள் என்று தன்னுடை The Nasca Lines: A New Perspective on their Origin and Meanings என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். மேலும் அவர் இங்கு உள்ள எல்லா கோடுகள் மற்றும் ஓவியங்கள் அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தை மையமாய் கொண்டே வரையப்பட்டுள்ளது என்று கண்டறிந்தார். அதன் பின்னேன் அவருக்கு பின் தோன்றிய அறிவியலாளர்கள் அந்த கிராமத்தை ஆராய ஆரம்பித்தனர். அப்போது புலப்பட்டது அங்கே மறைந்து கிடந்தது அடுத்த ஆச்சர்யம்.

Chauchilla. இது ஓவியங்களின் மையம். ஆனால் இந்த கிராமம் மக்கள் வாழ்ந்த இடமல்ல… மாறாக அது நரபலிக்கென்று உருவாக்கப்பட்ட ஒரு தனி கிராமம்.

குடுவைக்குள் புதைக்கப்பட்ட மனிதர்கள், அமர்ந்திருக்கும் நிலையிலே புதைக்கப்பட்ட மனிதர்கள் என்று அந்த சிறு கிராமம் முழுவதும் எங்கு தோண்டினாலும் மனித உடல்களும், அவர்களோடு புதையுண்ட அறிய கைவினை பொருட்களுமாய் உள்ளன. இப்படி பலிக்கென்று தனியாய் ஒரு இடம். அதனோடு தொடர்புகொண்ட ஓவியங்கள் என்று அமானுஷ்யங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த உடல்களுக்கும் ஓவியங்களுக்கும் ஒன்று சேரும் இடத்தை அன்றி என்ன ஒருமைப்பாடு என்று யாரும் இது வரை கண்டறியப்படவில்லை. பல அமானுஷ்ய நகரங்களை போலவே இந்த NAZCA கோடுகளும் மர்மம் நிறைந்ததே.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Nazca lines

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X