இன்றைய நவீன உலகில், ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு, வேலை என எல்லாவற்றுக்கும் போனை நம்பியிருக்கிறோம். ஆனால், நீண்ட நேரம் போனை பயன்படுத்துவதால் ஏற்படும் கழுத்து மற்றும் முதுகு வலி போன்ற உடல்நலப் பிரச்சனைகளை பலர் எதிர்கொள்கின்றனர். இந்த வலிகள் நாள்பட பெரிய பிரச்சனைகளாக மாறக்கூடும். "எரக்டர் ஸ்பைனே" தசை இந்த வலிகளுக்கு முக்கிய காரணம்
Advertisment
இந்த வலிகளில் இருந்து விடுபடவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் டாக்டர் ராஜா சில எளிய மற்றும் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, சுவர் அல்லது ஒரு நாற்காலியைப் பயன்படுத்தி செய்யக்கூடிய சில பயிற்சிகளையும் அவர் பரிந்துரைக்கிறார்.
கணினிகள் அல்லது போன்களை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் இந்த ஸ்ட்ரெட்களை தொடர்ந்து செய்யுமாறு டாக்டர் ராஜா அறிவுறுத்துகிறார். இந்த ஸ்ட்ரெட்சஸ் தசை இறுக்கத்திற்கு, குறிப்பாக பெக்டோரலிஸ் மைனர் தசையில், கழுத்து மற்றும் தோள்பட்டை வலிக்கு பங்களிக்கும்