உட்கார்ந்த வாழ்க்கை முறைகள் அதிகரித்துள்ளதால் கழுத்து வலி இப்போதெல்லாம் மிகவும் பொதுவானதாகிவிட்டது. மோசமான தோரணை, உடல் அழுத்தம் முதல் மன அழுத்தம் வரை- இதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் ஏராளம்…
சில சமயங்களில் இது ஒரு அடிப்படை சுகாதார நிலை அல்லது காயத்தையும் சுட்டிக்காட்டலாம்.
இது உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவது மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கைத் தரத்தையும் குறைக்கும். வலி மருந்து மற்றும் மன அழுத்த மேலாண்மை மூலம் கழுத்து வலியை சரிசெய்ய முடியும், அதே வேளையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது, உங்கள் தினசரி வழக்கத்தில் வழக்கமான உடற்பயிற்சியை இணைத்துக்கொள்வது போன்றவை அதிசயங்களைச் செய்யலாம்.
இருப்பினும், கழுத்து வலியை சமாளிக்க எந்த பயிற்சிகள் உதவுகின்றன என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?
பிரபல ஃபிட்னெஸ் டிரெயினர் யாஸ்மின் கராச்சிவாலா, கழுத்து வலியை குணப்படுத்த உதவும் சில பயிற்சிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
டெலஸ்கோப்
ஃபிட்னெஸ் கோச் உத்சவ் அகர்வால் கருத்துப்படி, டெலஸ்கோப் பயிற்சி, இது சின் டக் உடற்பயிற்சி என்றும் அழைக்கப்படுகிறது, இது கழுத்துக்கு ஒரு எளிய, நன்மை பயக்கும் பயிற்சியாகும்.
இதை செய்வதன் மூலம், கழுத்தின் முன்பகுதி மற்றும் மேல் முதுகில் உள்ள தசைகள் குறிவைக்கப்படுகின்றன.
தசைகளை வலுப்படுத்துதல், தலை மற்றும் கழுத்தை சீரமைப்பதன் மூலம் தோரணையை மேம்படுத்துதல், கழுத்து மற்றும் தோள்களில் உள்ள அழுத்தத்தை குறைத்தல் மற்றும் தசை ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் கழுத்து வலியைப் போக்குதல் போன்றவை இந்த பயிற்சியின் சில நன்மைகள், என்று அவர் கூறினார்.
பின்வீல்
பின்வீல் (Pinwheel) உடற்பயிற்சி, கழுத்து இயக்கம் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இது கழுத்து இயக்கம் மற்றும் தசை அழுத்தத்தை போக்க உதவுகிறது.
தசை ஏற்றத்தாழ்வுகள் மற்றும் விறைப்புத் தன்மையை சரி செய்வதன் மூலம், கழுத்து வலியைக் குறைப்பதில் பங்களிக்க முடியும், என்றார் அகர்வால்.
நிபுணர்களின் கூற்றுப்படி, கழுத்து வலிக்கு உதவக்கூடிய பல பயிற்சிகள் உள்ளன:
/indian-express-tamil/media/media_files/srmt7pejAK6JdLleQw9V.jpg)
நெக் ஸ்ட்ரெட்சஸ் (Neck stretches)
தலையை பக்கவாட்டாகவோ, முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ சாய்க்கும் மென்மையான ஸ்ட்ரெட்ச் பயிற்சிகள் தசை அழுத்தத்தை போக்கவும், கழுத்தில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவும்.
ஷோல்டர் ஷ்ரக்ஸ் (Shoulder shrugs)
தோள்களை காதுகளை நோக்கி உயர்த்தி பின்னர் கீழே விடுவது, கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் உள்ள அழுத்தத்தை விடுவிக்க உதவும்.
நெக் ரொட்டேஷன் (Neck rotations)
மெதுவாக தலையை இடது, வலதும் திருப்புவது கழுத்து இயக்கத்தை மேம்படுத்துவதோடு, விறைப்புத்தன்மையையும் குறைக்கும்.
இந்தப் பயிற்சிகளைச் சரியாகச் செய்வதை நினைவில் வைத்துக் கொள்வதும், உங்களுக்கு தொடர்ந்து அல்லது கடுமையான கழுத்து வலி இருந்தால், சுகாதார நிபுணர் அல்லது தகுதி வாய்ந்த உடற்பயிற்சி பயிற்சியாளரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
அவர்கள் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலை வழங்கலாம் மற்றும் உங்கள் குறிப்பிட்ட நிலைக்கு பயிற்சிகள் பொருத்தமானவை என்பதை உறுதிப்படுத்தலாம்.
Read in English
Say goodbye to neck pain with these simple exercises
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“