உட்கார்ந்த வாழ்க்கை முறை அதிகரித்து விட்டதால் கழுத்து வலி இப்போதெல்லாம் மிகவும் பொதுவானதாகிவிட்டது. மோசமான தோரணை, உடல் அழுத்தம் முதல் மன அழுத்தம் வரை இதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் ஏராளம்.
சில சமயங்களில் இது ஒரு அடிப்படை சுகாதார நிலை அல்லது காயத்தையும் சுட்டிக்காட்டலாம்.
இது உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவது மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும். வலி மருந்து மற்றும் மன அழுத்த மேலாண்மை மூலம் கழுத்து வலியை மேம்படுத்த முடியும் அதே வேளையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது, உங்கள் தினசரி வழக்கத்தில் வழக்கமான உடற்பயிற்சியை இணைத்துக் கொள்வது போன்றவை அதிசயங்களைச் செய்யலாம்.
பிரபல ஃபிட்னெஸ் டிரெயினர் யாஸ்மின் கராச்சிவாலா, கழுத்து வலியை குணப்படுத்த உதவும் சில பயிற்சிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
டெலஸ்கோப்
ஃபிட்னெஸ் கோச் உத்சவ் அகர்வால் கருத்துப்படி, டெலஸ்கோப் பயிற்சி, சின் டக் உடற்பயிற்சி (chin tuck) என்றும் அழைக்கப்படுகிறது, இது கழுத்துக்கு ஒரு எளிய, நன்மை பயக்கும் பயிற்சியாகும். இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம், கழுத்தின் முன்பகுதி மற்றும் மேல் முதுகில் உள்ள தசைகள் குறிவைக்கப்படுகின்றன.
தசைகளை வலுப்படுத்துதல், தலை மற்றும் கழுத்தை சீரமைப்பதன் மூலம் தோரணையை மேம்படுத்துதல், கழுத்து மற்றும் தோள்களில் உள்ள அழுத்தத்தை குறைத்தல் மற்றும் மோசமான தோரணை அல்லது தசை ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படும் கழுத்து வலியைப் போக்குதல் போன்றவை இந்த பயிற்சியின் சில நன்மைகள், என்று அவர் கூறினார்.
பின்வீல்
பின்வீல் (Pinwheel) உடற்பயிற்சி கழுத்து இயக்கம் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இது கழுத்து இயக்கம், (உடல் நிலை பற்றிய விழிப்புணர்வு) மற்றும் தசை பதற்றத்தை போக்க உதவுகிறது.
தசை ஏற்றத்தாழ்வுகள் மற்றும் விறைப்புத் தன்மையை சரி செய்வதன் செய்வதன் மூலம், கழுத்து வலியைக் குறைப்பதில் பங்களிக்க முடியும், என்றார் அகர்வால்.
இந்தப் பயிற்சிகளைச் சரியாகச் செய்வதை நினைவில் வைத்துக் கொள்வதும், உங்களுக்கு தொடர்ந்து அல்லது கடுமையான கழுத்து வலி இருந்தால், சுகாதார நிபுணர் அல்லது தகுதி வாய்ந்த உடற்பயிற்சி பயிற்சியாளரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். அவர்கள் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலை வழங்கலாம் மற்றும் உங்கள் குறிப்பிட்ட நிலைக்கு பயிற்சிகள் பொருத்தமானவை என்பதை உறுதிப்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“