வீட்டில் விசேஷமா? நிகழ்வில் ஜொலிக்க இந்த ஐந்து வகையான நெக்லஸ் இருக்கா?

Necklaces must have accessories fashion weddings festivals Tamil News காலர் நெக்லஸ், திருமணங்கள் மற்றும் பண்டிகைகள், சிறிய கூட்டங்கள் அல்லது பூஜைகளுக்கு அணியலாம்.

Necklaces must have accessories fashion weddings festivals Tamil News
Necklaces must have accessories fashion weddings festivals Tamil News

Necklaces must have accessories fashion weddings festivals Tamil News : இந்திய நகைகளுக்கு நிகர் வேறெதுவும் இல்லை. பண்டிகை காலம் மற்றும் திருமண சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நேரத்தில், சில அழகிய ஆபரணங்களைச் சேமித்து வைப்பது முக்கியம். அந்த வரிசையில், மாடர்ன் அல்லது பாரம்பரியம் என எந்த வகை நகைகளாக இருந்தாலும், உங்கள் ஆடையோடு ஒத்துப்போகும் ஆபரணத் தேர்வுதான் மிகவும் முக்கியம்.

அப்படிப்பட்ட சில ஸ்பெஷல் ஆபரணங்களின் பரிந்துரை இங்கே உள்ளன. நிச்சயம் இந்த ஐந்து வகையான நெக்லஸ்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். எந்தவித நிகழ்வாக இருந்தாலும் நிச்சயம் அவை கைகொடுக்கும்.

முத்து மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட குந்தன் சொக்கர்

சொக்கர்களை பல ஆடைகளுடன் இணைந்து அணியலாம். புடவை, லெஹெங்கா சோலி உள்ளிட்ட பாரம்பரிய உடைகளுடன் இந்த ஆபரணத்தை உடுத்தலாம். மேலும், இந்தியப் பாரம்பரிய உடைகள் மட்டுமின்றி இண்டோ-வெஸ்டர்ன் போன்ற ஃபியூஷன்  உடைகளுடனும் இந்த சோக்கர்களை இணைத்துப் பயன்படுத்தலாம்.

நீண்ட நெக்லஸ்

ஒரு நெக்லஸைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அந்த முழு அலங்காரத்தின் நெக்லைன் அல்லது கழுத்துப் பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது. நீண்ட நெக்லஸ் பல்துறை மற்றும் எந்த அலங்காரத்திற்கும் ராயல் அழகைச் சேர்க்கின்றன. இதில் சிறந்த அம்சம் என்னவென்றால், இந்த நெக்லஸ்கள் ஆடை மற்றும் பண்டிகையைப் பொறுத்து மாற்றிக்கொள்ளலாம்.

காலர் நெக்லஸ்

காலர் நெக்லஸ்கள் உங்கள் சிறப்பு நிகழ்வுகளை மறக்கமுடியாததாகவும் அழகாகவும் மாற்றும். இதுபோன்ற அணிகலன் மிகச்சிறிய வடிவங்களுடன் பாரம்பரிய இந்திய நகைகளின் சரியான கலவையோடு வருகின்றன. காலர் நெக்லஸ், திருமணங்கள் மற்றும் பண்டிகைகள், சிறிய கூட்டங்கள் அல்லது பூஜைகளுக்கு அணியலாம்.

ஆக்சிடைஸ்டு ஆபரணங்கள்

நவராத்திரி மற்றும் துர்கா பூஜை நேரத்தில், ஆக்சிடைஸ்டு நகைகளுக்கான தேவை அதிகரிக்கிறது. ஆக்சிடைஸ்டு நெக்லஸ்கள் மற்ற ஆபரணங்களை விட அதிகம் விரும்பப்படுகின்றன. ஏனெனில், அவை எடை குறைவாகவும் மற்றும் தேர்வு செய்ய பல்வேறு டிசைன்களையும் கொண்டுள்ளன.

மல்டி ஸ்ட்ரிங் நெக்லஸ்

இந்தக் காலத்துப் பெண்கள் குறைந்தபட்ச நகைகளை அணியவே விரும்புகிறார்கள். என்றாலும்கூட இன்னும் பல சரம் கொண்ட நெக்லஸ்கள் மீது தனி பிரியம் உண்டு. இது அவர்களுடைய தோற்றத்திற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கிறது. இந்த ஒரு நெக்லஸ் அணிந்தாலே போதும், வேறு எந்த ஆபரணமும் அணிய அவசியமே இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Necklaces must have accessories fashion weddings festivals tamil news

Next Story
எலுமிச்சையை தோலுடன் கொதிக்க வைத்து… எவ்ளோ நன்மை இருக்குன்னு பாருங்க!Health benefits of lemon: boiled lemon water benefits tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com