கேரளாவில் கள்ளிபாரா மலைகளில் பூத்துக் குலுங்கும் அரிய வகை நீலக் குறிஞ்சி மலர்கள்!
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மிக அரிய அதிசய நிகழ்வாக, தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டத்தில் உள்ள கள்ளிபாரா மலைகளில் பூத்துக் குலுங்கும் நீலக் குறிஞ்சி மலர்களை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து ரசித்துச் செல்கிறார்கள்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மிக அரிய அதிசய நிகழ்வான, தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டத்தில் உள்ள கள்ளிபாரா மலைகளில் பூத்துக் குலுங்கும் நீலக் குறிஞ்சி மலர்களை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து ரசித்துச் செல்கிறார்கள்.
Advertisment
'ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா' என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படும் நீலக்குறிஞ்சி ஒரு அரிய ஊதா-நீல நிற மலர். நீல நிறத்தில் பூக்கும் குறிஞ்சி மலர் என்பதால் இதை நீலக் குறிஞ்சி மலர் என்று அழைக்கிறார்கள். நீலக் குறிஞ்சி மலர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கிறது.
மூணாறு-குமுளி நெடுஞ்சாலையில் சந்தானபாறை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கள்ளிப்பாராவில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள கள்ளிப்பாரா மலைப்பகுதியில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
நீலக் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவதால், இந்த அரிய அழகான காட்சியைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்து வருகிறார்கள்.
கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறைக்கு நீலக் குறிஞ்சி மலர்கள் பூத்திருப்பது ஒரு பெரிய நிவாரணமாக வந்துள்ளது. இப்பகுதிக்கு கடந்த ஒரு வாரமாக கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த கிராமப் பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது. இரவு முழுவதும் கண்காணிப்பதுடன், செடிகள் மற்றும் பூக்கள் சேதமடைவதை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
பார்வையிடும் வரும் மக்கள் நீலக் குறிஞ்சி பூக்களை பறித்தாலோ, அழித்தாலோ அபராதம் விதிக்கப்படும் என, மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலக் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகைக் காண வரும் சுற்றுலா பயணிகள் நீலக்குறிஞ்சி மலர்களுடன் படம் எடுத்துக்கொள்கிறார்கள். நீலக் குறிஞ்சி மலர்களைப் பார்ப்பதற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கள்ளிப்பாரா மலைப்பகுதியில் மாலை 4.30 மணி வரை மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”