/tamil-ie/media/media_files/uploads/2020/10/Tamil-Serial-News-Serial-Artist-Neelimarani.jpg)
நீலிமா ராணி
Tamil Serial News: சினிமாவில் இருந்து சீரியல் வரைக்கும் எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் சிலரை மட்டும் தான் ரசிகர்கள் என்றும் பசுமையாக மனதில் வைத்திருப்பார்கள். அதில் முக்கியமானவர் நடிகை நீலிமா ராணி. தனது ஆரம்ப காலம் முதல் இன்று வரை, ஒரே மாதிரியாக காட்சியளிக்கிறார்.
 மெரூன் மேக்ஸியில் க்யூட் நீலிமா ராணிசென்னையில் பிறந்து வளர்ந்த நீலிமா, தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 15 வயதில் புரஃபஷனலாக தனது கரியரை தொடங்கினார். ‘ஒரு பெண்ணின் கதை’ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கிய நீலிமாவுக்கு, அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின. ’மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’ போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டு, மறுபுறம் திரைப்படங்களிலும் தனது பயணத்தைத் தொடர்ந்தார். ’நான் மகான் அல்ல’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நீலிமா. இதில் ‘நான் மகான் அல்ல’ படத்தில் சிறந்த சப்போர்ட்டிங் கதாபாத்திரத்திற்காக, எடிசன் விருதும் வென்றார்.
 கணவர் இசைவாணனுடன் நீலிமாநீலிமாவின் கணவர் இசைவாணன். இவர்களுக்கு அதிதி இசை என்ற அழகிய மகள் இருக்கிறார். இறுதியாக அரண்மகனை கிளி சீரியலில் துர்கா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்த அவர், பாதியிலேயே அதிலிருந்து விலகினார். அதோடு சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதை நிர்வகித்தும் வருகிறார். சீரியல், சினிமா மட்டுமல்லாமல், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். தவிர டைரக்ட் செய்வதிலும் நீலிமாவுக்கு அத்தனை ஆர்வமாம்.
 அட்டகாசமான அழகில்...அதோடு அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதிந்திருக்கிறார் நீலிமா ராணி. தொடர்ந்து பல ஃபோட்டோ ஷூட்களை நடத்தி, அந்தப் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் வருகிறார். அதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
 நோ மேக்கப் நீலிமாசீரியல் மற்றும் சினிமாவில் குணச்சித்திரம், வில்லத்தனம் என வெரைட்டியாக நடித்திருக்கும் நீலிமாவுக்கு பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம் இருப்பது கூடுதல் சிறப்பு. அதோடு இவர் வேலை செய்யாத சேனல்களே இல்லை எனலாம். அப்படி ஏராளமான சீரியல்களில் பல்வேறு தொலைக்காட்சிகளில் பணி புரிந்துள்ளார். தற்போது பல யூ-ட்யூப் சேனல்களில் நேர்க்காணல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us