பொடுகு தொல்லையை போக்க பெஸ்ட் ஹேர்பேக்; வேப்பிலை கூட இதை மட்டும் சேருங்க!
பொடுகு தொல்லையால் முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்களுக்கு வேப்பிலை கொண்டு தயாரிக்கும் ஹோம்மேட் ஹேர்பேக் எப்படி தயாரிப்பது என இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. முடி உதிர்வு பிரச்சனைக்கு எத்தனையோ காரணங்கள் கூறப்படுகின்றன. உதாரணமாக, உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், தூக்கமின்மை, மன அழுத்தம் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
Advertisment
எனினும், பலருக்கு பொடுகு தொல்லையால் முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. உடல் உஷ்ணம் அதிகரித்து வறட்சி தன்மை உருவாகும் போது பொடுகு ஏற்படுகிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர். இவ்வாறு பொடுகு வந்தால் அவை முடி உதிர்வு பிரச்சனையை ஏற்படுத்துவதுடன் முடியின் அடர்த்தியையும் பாதிக்கிறது.
இதற்காக நிறைய ஷாம்புக்கள், ஹேர் ஆயில்கள் கடைகளில் கிடைக்கிறது. ஆனால், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து ஹோம்மேட் ஹேர்பேக் தயாரித்து அதனை பயன்படுத்தலாம். இப்படி செய்யும் போது இரசாயனங்கள் கலந்த பொருட்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடலாம்.
ஒரு கைப்பிடி அளவிற்கு வேப்பிலை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அரைத்ததும் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் இரண்டு அல்லது மூன்று துளிகள் எலுமிச்சை சாறு ஆகிய இரண்டையும் சேர்த்து கலக்க வேண்டும். எனினும், எலுமிச்சை சாறு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
Advertisment
Advertisements
இந்த ஹேர்பேக்கை தலைக்கு குளிப்பதற்கு முன்னால் முடியின் வேர்ப்பகுதியில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதையடுத்து, சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கி முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
இப்படி வீட்டில் செய்யும் ஹேர்பேக்குகளில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்காததால் ஒவ்வாமை மற்றும் பக்க விளைவுகள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் குறைவு.
நன்றி - IBC Mangai Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.