/indian-express-tamil/media/media_files/oL3tlKDLRr8HGVIboqmq.jpg)
வீட்டில் தோசை மாவு இல்லைனா, கவலைப் பட வேண்டாம். இந்த நீர் தோசை செய்யலாம். கூடவே இந்த வெங்காய காரச் சட்னி செய்யுங்க. 
தோசைக்கு தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 2 கப்
தேங்காய் துருவல்- அரை கப்
தண்ணீர்- 4 கப்
உப்பு – 1 ஸ்பூன் 
சர்க்கரை – 1 ஸ்பூன் 
செய்முறை: அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வறுக்க வேண்டும். தொடர்ந்து, அதை மிக்ஸியில் சேர்த்து, தேங்காய் துருவல், உப்பு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அதில் மீண்டும் தண்ணீர் சேர்த்து மாவாக மாற்றவும். 1 மணி நேரம் கழித்து தோசை சுட்டு எடுக்கலாம். 
தேவையான பொருட்கள்
வத்தல் – 5
பூண்டு – 6
உப்பு 
தண்ணீர்
சின்ன வெங்காயம் -12
பெரிய வெங்காயம் – 1
புளி சிறிய அளவு 
எண்ணெய்- 1 ஸ்பூன் 
கடுகு – அரை ஸ்பூன் 
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன் 
கறிவேப்பிலை ஒரு கொத்து 
செய்முறை : முதலில் பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து அதை புளி சேர்த்து அரைத்துகொள்ளவும். இதுபோல் வத்தல், பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து, இத்துடன் சேர்க்கவும். தொடர்ந்து இதில் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை தாளித்து கொட்டவும். சூப்பரான வெங்காய காரச் சட்னி ரெடி. 
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us