படிச்சது பிடிஎஸ்… புடிச்சது தளபதி..! ‘இன்ஸ்டா’ வால் என்ட்ரி ஆன தர்ஷனா

நீதானே எந்தன் பொன்வசந்தம் அனுவிற்கு பிடித்த நடிகர் விஜய்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் நீதானே எந்தன் பொன்வசந்தம். இந்த தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர் தர்ஷனா. இந்த சீரியல் 40 வயது ஆணிற்கும் இருபது வயது பெண்ணிற்கும் உண்டாகும் காதலைப் பற்றியது. ஏற்கனவே கன்னடத்தில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றதையடுத்து தமிழில் இதை எடுத்திருக்கிறார்கள். தமிழிலும் இது எதிர்பார்த்த அளவில் ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பையும் பெற்றிருக்கிறது .இதில் தர்ஷனா அனு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அதிலும் இந்த சீரியலில் இவர் மிடில் கிளாஸ் பெண்ணாக கச்சிதமாக பொருந்துகிறார். தன்னுடைய காதலை தான் காதலிக்கும் சூரியபிரகாஷிடம் மறைமுகமாக கூறி அவர் அந்த காதலை இன்னும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் நிலையில் இவருடைய தவிப்புகள் அனைவரும் ரசிக்கும்படி இருக்கம். தினமும் இந்த சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங் கூடிக்கொண்டே வருகிறது.

தர்ஷனா அசோகன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் இருந்தாலும் குன்னூர் தான் சொந்த ஊர். இவர் தனது பெற்றோரின் ஆசைப்படி சென்னையில் பிடிஎஸ் படித்துக்கொண்டிருந்தபோது கிடைக்கும் நேரங்களில் போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். இந்த புகைப்படங்களை மூலம் தான் நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் நடிப்பதற்கு முதலில் அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களை கன்வென்ஸ் செய்து நடிக்க வந்துள்ளார். ஆரம்பத்தில் இந்த பீல்டில் வரும்போது நடிக்க தெரியாமல் தான் திணறும் போது கேலி செய்தார்கள் என கூறியுள்ளார் அனு. ஆனால் தன்னுடன் நடித்து வரும் நடிகர்கள் தனக்கு நிறைய கற்றுக்கொடுத்ததால் தற்போது சிறப்பாக நடித்து வருவதாக கூறுகிறார்.
இந்த சீரியலின் மூலம் இவருக்கு தமிழக மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் இவர் அனுவாகவே குடிகொண்டு விட்டார் . அனுவிற்கு பிடித்த நடிகர் விஜய். யாரையும் சார்ந்து வாழக்கூடாது என்பது தர்ஷனாவின் கொள்கை.

சூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் செம ஜாலியாக கொண்டாடும் போட்டோக்களையும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் இதனை பார்த்த ரசிகர்களும் இவரை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். சிலருக்கு சேலை சரியாக மேட்ச் ஆகும், சிலருக்கு மாடர்ன் உடை பொருத்தமாக இருக்கும் ஆனால் இரண்டிலுமே இவர் வேற லெவல் என்று இவருடைய ரசிகர்கள் இவரை வர்ணித்து வருகிறார்கள் .சமூக வலைத்தளங்களில் அனைவரும் கிளாமராக போட்டோக்களை போட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் போது இவர் மட்டும் சேலை அணிந்து கொண்டும் மாடல் உடையாக இருந்தாலும் அதிலும் எல்லை மீறாமல் இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்கிறது.

சமீபத்தில் ஜீ தமிழில் நடைபெற்ற விருது வழங்கும் நிdகழ்ச்சியில் இந்த சீரியலில் இவருக்கும் இவருடன் நடிக்கும் ஜெய் ஆகாஷ்க்கும் அனைவரின் மனதை கவர்ந்த ஜோடி என விருதுகள் வழங்கப்பட்டது.சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் கலக்க வேண்டும் என்பது தர்ஷனாவின் ஆசை. அதன் முதல் அடியாக ஏகப்பட்ட போட்டோ ஷூட் நடத்தி பதிவிட்டு வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Neethane enthan ponvasantham zeetamil serial actress dharshana biography

Next Story
அறுசுவை… ஆரோக்கியம்…. தக்காளி ரசம் ஈஸியா செய்வது எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com