செம்ம சுவையா இருக்கும், நெல்லிக்காய் மோர், இப்படி செய்து குடியுங்க.
தேவையான பொருட்கள்
1 கப் தயிர்
1 கப் தண்ணீர்
நெல்லிக்காய் 4 நறுக்கியது
1 ஸ்பூன் சீரகம்
3 பச்சை மிளகாய்
1 கொத்து கருவேப்பிலை
1 துண்டு இஞ்சி
உப்பு
செய்முறை : ஒரு மிக்ஸியில் தயிர், தண்ணீர் சேர்த்து அடித்துகொள்ளவும். மீண்டும் மிக்ஸியில் நெல்லிக்காய் நறுக்கியது, சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை,, இஞ்சி அரைத்து கொள்ளவும். தொடர்ந்து இதை மோரில் சேர்த்து அரைத்துகொள்ளவும், உப்பு சேர்த்து கிளரவும்.