இனி மட்டன் வாங்கினால் இப்படி, திநெல்வேலி ஸ்பெஷல் மட்டன் வறுவல் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
அரை கிலோ மட்டன்
1 ஸ்பூன் மிளகாய் பொடி
1 ஸ்பூன் மல்லிப் பொடி
¼ ஸ்பூன் மஞ்சள் பொடி
1 ஸ்பூன் கடுகு
¼ ஸ்பூன் வெந்தயம்
¼ ஸ்பூன் பெருஞ்சீரகம்
¼ ஸ்பூன் சீரகம்
1 துண்டு பட்டை
1 கிராம்பு
1 கல் பாசி
சின்ன வெங்காயம் 10
தேங்காய் துருவல் 4 ஸ்பூன்
தக்காளி 1 நறுக்கியது
இஞ்சி – பூண்டு விழுது 1 ஸ்பூன்
2 பச்சை மிளகாய்
5 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
1 கொத்து கருவேப்பிலை
செய்முறை : முதலில் எண்ணெய் சேர்க்கவும். தொடர்ந்து சூடானதும் கடுகு, உளுந்து, வெந்தயம் சேர்க்க வேண்டும். தொடர்ந்து பட்டை, கிராம்பு, கல் பாசி கருவேப்பிலை சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்க்கவும். தொடர்ந்து இஞ்சி -பூண்டு விழுது சேர்த்து கிளரவும். தொடர்ந்து மட்டனை சேர்க்கவும். தொடர்ந்து இதை குக்கரில் சேர்த்து 6 விசில் விட்டு எடுக்கவும். தொடர்ந்து குக்கரை திறந்து அதில் மிளகாய் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி, தக்காளி சேர்த்து கிளரவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் தேங்காய், பெருஞ்சீரகம், சீரகம் சேர்த்து வறுத்து அரைத்துகொள்ளவும். இதை குக்கரில் சேர்த்து கிளரவும்.