நெல்லிக்காயில் இப்படி ஒரு முறை சட்னி செய்து பாருங்க,
தேவையான பொருட்கள்
4 நெல்லிக்காய்
2 ஸ்பூன் எண்ணெய்
1 டேபிள் ஸ்பூன் மல்லி
1 டீஸ்பூன் வெள்ளை எள்ளு
1 டீஸ்பூன் கடலை பருப்பு
1 டீஸ்பூன் சீரகம்
4 பச்சை மிளகாய்
துருவிய நெல்லிக்காய்
தக்காளி 3 நறுக்கியது
1 ஸ்பூன் உப்பு
1 டீஸ்பூன் கடலை பருப்பு
அரை டீஸ்பூன் கடுகு
அரை டீஸ்பூன் சீரகம்
2 வத்தல்
1 கொத்து கருவேப்பிலை
செய்முறை : நெல்லிக்காய்யை நன்றாக துருவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், மல்லி, எள்ளு, கடலை பருப்பு, சீரகம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து நிறம் மாறியதும் மிக்ஸியில் சேர்க்கவும். தொடர்ந்து கொஞ்சம் எண்ணெய் சேர்த்து நெல்லிக்காய், பச்சை மிளகாய் வதக்கவும். இதையும் மிக்ஸியில் சேர்க்கவும் தொடர்ந்து தக்களியை வதக்கி மிக்ஸியில் சேர்க்கவும். இதை கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடுகு, கடலை பருப்பு, சீரகம் , வத்தல், கருவேப்பில்லை சேர்த்து இந்த சட்னியில் தாளித்து கொட்டவும்.