செம்ம சுவையான நெல்லிக்காய் ஊறுகாய், இப்படி செய்யுங்க.
தேவையான பொருட்கள்
சின்ன நெல்லிக்காய் கால் கிலோ
மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
தண்ணீர்
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் வெந்தயம்
2 ஸ்பூன் நல்லெண்ணை
1 ஸ்பூன் மிளகாய் பொடி
உப்பு
காயப் பொடி
செய்முறை : நெல்லிக்காய்யை, தண்ணீர் சேர்த்து, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து நெல்லிக்காய்யை உதிர்த்து, விதைகளை நீக்கவும். ஒரு பாத்திரத்தில் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுக்க வேண்டும். தொடர்ந்து இதை பொடித்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணை சேர்த்து அதில், நெல்லிக்காய் சேர்த்து கிளரவும். தொடந்து உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து மஞ்சள்பொடி, மிளகாய் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து காயப் பொடி, கடுகு- வெந்தயம் அரைத்தது சேர்த்து கிளரவும். சூப்பரான நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.